ஜெயிலர் 2-ன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரெடியான ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.
ஜெயிலர் 2-ன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரெடியான ரஜினி
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்றது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் இந்த வாரம் மைசூரில் நடைப்பெற இருக்கிறது. அதற்கடுத்து இலங்கையிலும் சென்னையிலும் நடக்க இருக்கிறது. திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com