arasan movie - Priyanka Mohan
arasan movie - Priyanka Mohan

Arasan | அரசன் படத்தில் இணைந்த பிரியங்கா மோகன் - வெளியான புதிய அப்டேட்

அரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Published on

நடிகர் கமல் ஹாசனுடன் "தக் லைப்" திரைப்படத்தில் நடித்த பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வடசென்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வரும் அரசன் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போல் கதையம்சம் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

இதனிடையே அரசன் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அரசன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்து பெயர் வாங்கிய யோக லட்சுமியும் ஒரு முக்கிய ரோலில் இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

X

Maalai Malar
www.maalaimalar.com