Arasan | தொடர் படப்பிடிப்பில் “அரசன்” - வெளியான புது அப்டேட்

அரசன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Arasan | தொடர் படப்பிடிப்பில் “அரசன்” - வெளியான புது அப்டேட்
Published on

நடிகர் கமல் ஹாசனுடன் "தக் லைப்" திரைப்படத்தில் நடித்த பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், "அரசன்" திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதுகுறித்த பதிவில், படக்குழுவினருடன் நடிகர் யோகி பாபுவை தயாரிப்பாளர் தானு டேக் செய்துள்ளார். அதன்படி அரசன் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவும் நடிப்பதாகவும், இவர் தற்போது நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்திருப்பதாக தெரிகிறது.

வடசென்னையை மையமாக கொண்டு படம் உருவாகி வரும் அரசன் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் காலக்கட்டத்தில் நடைபெறுவது போல் கதையம்சம் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, வேல்ராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அரசன் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com