நெல்சா.. இந்த பார்ட்-ல யோகிய ரிவென்ஞ் எடுக்கணும்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலகல

ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்று வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.
நெல்சா.. இந்த பார்ட்-ல யோகிய ரிவென்ஞ் எடுக்கணும்..! ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினி கலகல
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்று வருகிறது.

படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் யோகி பாபு சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் ' இப்பொழுது உள்ள இயக்குநர்களில் அதிக நகைச்சுவை உணர்வுள்ள இயக்குநர் அது நெல்சன் மட்டுமே. ரஜினிகாந்த் சார் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆர்வத்துடன் செட்டுக்கு வருகிறார்.

ரஜினி சார் நெல்சனிடம் " நம்ம யோகி பாபுவை சும்மா விடக்கூடாது. என்னை பார்ட் 1-இல் மிகவும் கிண்டல் செய்து விட்டார். இந்த பாகத்தில் அதை சரிகட்ட வெண்டும் என கூறியுள்ளார்.. நாம் எந்த கவுண்டர் அவரை அடித்தாலும் பதிலுக்கு அவர் நன்றாக கவுண்டர் கொடுப்பார் அதனால் தான் அவர் இப்பொழுது சூப்பர்ஸ்டார்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com