

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் `கோல்டன் ஸ்பேரோ' வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றுவரை இந்தப் பாடலின் வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படத்தின் 'காதல் ஃபெயில்' பாடல் வருகிற 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.