தாயார் மறைவு.. துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார் அஜித்

முதல்வர் விஜய், அஜித் குமார் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தாயார் மறைவு.. துபாயில் இருந்து சென்னை வந்தடைந்தார் அஜித்
Published on

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 84. அஜித்தின் தாயாரான மோகினி மணி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

தாயார் மரணம் அடைந்த தகவல் கார் பந்தய பயிற்சிக்காக துபாயில் இருக்கும் அஜித்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை துபாயில் இருந்து புறப்பட்டு அஜித்குமார் சென்னை வந்தடைந்தார். அஜித் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் நடக்கிறது.

இதனிடையே முதல்வர் விஜய், அஜித் குமார் தாயார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com