LCU-வுக்குள் அடியெடுத்து வைத்த ரவி மோகன்.. 'பென்ஸ்' படத்தில் இணைவு

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
LCU-வுக்குள் அடியெடுத்து வைத்த ரவி மோகன்.. 'பென்ஸ்' படத்தில் இணைவு
Published on

லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் தயாரிப்பில் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது.

'ரெமோ', 'சுல்தான்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் வில்லனாக நிவின் பாலியும் நடிக்க இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

படத்தின் கதையை லோகேஷ் கனகராஜே எழுதியுள்ளார். இது லோகேஷின் எல்சியு யுனிவர்ஸில் நடக்கும் கதை ஆகும்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ‘லியோ’ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘பென்ஸ்’ படத்தில் நடிகர் ரவி மோகன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸில் அடியெடுத்து வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு போஸ்டரை லோகேஷ் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com