ஆகாய மார்க்கமாக ப்ரோமோஷன்... LIK படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆகாய மார்க்கமாக ப்ரோமோஷன்... LIK படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சென்னையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில், 'LIK' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மதுரை மற்றும் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து 'LIK' படத்தை நாளை முதல் திரையரங்குகளில் கண்டு மகிழலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com