ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்வி - லதா ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்

கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் இணையும் படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்வி - லதா ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்
Published on

நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து ரஜினிகாந்த் கூறுகையில், "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து ரஜினிகாந்த் மனைவி லதாவிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரே (ரஜினி) சொல்லிவிட்டார். உண்மை இல்லை என்றும் தவறான அவதூறுகளை பரப்பக்கூடாது என்று சொல்லிட்டார். தவறான அவதூறுகளை பரப்புவதால் எல்லாரையும் பாதிக்கும் என்றார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் இணையும் படம் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. இது மிகவும் உற்சாகமான தருணம். பெருமையான தருணம். அவரது (ரஜினிகாந்த்) நீண்ட கால சினிமா பயணத்திற்கு இறைவனின் அருளும், ரசிகர்களின் அன்பும், அவரது கடின உழைப்புமே காரணம் என்று மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com