

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிகர் கார்த்தி.
இவரது நடிப்பில் கடைசியாக நலன் குமாரசாமி இயக்கத்தில் 'வா வாத்தியார்' படம் வெளியானது. தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.
இதனிடையே, 'டாணாக்காரன்' பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு 'மார்ஷல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிஷெட்டி நடிக்கிறார்.
கார்த்தி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில், 'மார்ஷல்' படக்குழு நடிகர் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, 'மார்ஷல்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.