'கர' படத்தின் ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ பாடல் வெளியானது

இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'கர' படத்தின்  ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ பாடல் வெளியானது
Published on

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தின் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற 30-ந்தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே, ‘கர’ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் ஜெயராம் ‘முத்து செல்வன்’ என்ற கதாபாத்திரத்திலும் ‘செல்லி’ கதாபாத்திரத்தில் மமிதா பைஜுவும், ‘பரதன்’ கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், ‘கர’ படத்தின் 2-வது சிங்கிளான ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடியுள்ள காதல் பாடலாகும்.

முன்னதாக ‘கர’ படத்தின் முதல் பாடலான ‘வாயா என் கரசாமி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com