Kamal Haasan | ரஜினியுடனான திரைப்பட அப்டேட் கொடுத்த கமல் ஹாசன்!

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Kamal Haasan | ரஜினியுடனான திரைப்பட அப்டேட் கொடுத்த கமல் ஹாசன்!
Published on

45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஒரே திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், ரஜினி காந்த் உடனான திரைப்படம் குறித்த கேள்விக்கு கமல் ஹாசன் பதிலளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் ஹாசன் அரசியல் மற்றும் சினிமா பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், "ரஜினியுடன் நான் நடிக்கும் படம் தேர்தல் முடிந்த பிறகு தான் ஆரம்பிக்க வேண்டும். தற்போது எனக்கு தேர்தல் பணிகள் உள்ளன. அந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com