ஜேசன் சஞ்ஜய் இயக்கும் சிக்மா படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு

இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது.இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார்.
ஜேசன் சஞ்ஜய் இயக்கும் சிக்மா படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

சிக்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் டீசர் வெளியீடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வரும் 23-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com