'ஜன நாயகன்' கசிவு.. தங்களுக்கு தொடர்பில்லை என தணிக்கை வாரியம் விளக்கம் | Jananayagan

ஜன நாயகன் படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்ற தவறான தகவல்.
'ஜன நாயகன்' கசிவு.. தங்களுக்கு தொடர்பில்லை என தணிக்கை வாரியம் விளக்கம் | Jananayagan
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தற்போது வரை இப்படம் வெளியாகவில்லை.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படத்தின் 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

படம் இணையத்தில் வெளியானதை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தயாரிப்பு நிறுவனத்தின் புகாரை ஏற்று இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படம் கசிந்ததில் தங்களுக்கு தொடர்பில்லை என மத்திய தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது.

அதன் விளக்கத்தில், ஜன நாயகன் படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் கசிந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அடிப்படையற்ற தவறான தகவல்.

திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM முறையை சிபிஎப்சி பயன்படுத்துகிறது.

படத்திற்கான அணுகல் கடவுச்சொல் பாதுகாப்புடன் இருக்கும். KDM முழுமையாக தயாரிப்பாளர், இயக்குநரிடமே இருக்கும்.

சரியான KDM இல்லாமல் அந்தப் படத்தை அணுகவோ அல்லது பார்க்கவோ முடியாது.

ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் உரிய ஒப்புதல் பெற்று ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அது அவர்களிடமே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com