‘ஜன நாயகன்’ கசிவு: 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜன நாயகன்’ கசிவு விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.

ஆனால் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே இப்படம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் இணையத்தில் கசிந்தது.

இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து படத்தை இணையத்தில் கசியவிட்ட ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த ஒன்பது பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com