விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்யும் 'ஜெயிலர்2'

‘ஜெயிலர் 2’ படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வெளியாகும் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.
விநாயகர் சதுர்த்தியை டார்கெட் செய்யும் 'ஜெயிலர்2'
Published on: 

இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்2’. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட புது நடிகர்களும் நடித்து உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே, ‘ஜெயிலர் 2’ படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வெளியாகும் என முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்2’ படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 10 அல்லது 11-ஆம் தேதிகளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com