ஜன நாயகன் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திர பெயர் குறித்த தகவல் வெளியீடு

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக உள்ளது
ஜன நாயகன் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திர பெயர் குறித்த தகவல் வெளியீடு
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக கொடைக்கானல் பகுதியில் நடைப்பெற்றது.

இந்நிலையில் ஜன நாயகன் படத்தில் விஜ்ய்யின் கதாப்பாத்திர பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் இப்படத்தில் தளபதி வெற்றி கொண்டான் (TVK) என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பல அரசியல் குறித்த வசங்களும் காட்சிகளும் இடம் பெற்று இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com