விஜய் பற்றி பேசி ஏ.ஆர்.முருகதாசை திக்குமுக்காட வைத்த படக்குழுவினர்

விழாவில் பேசிய பலரும் விஜய்க்கு அரசியல் தூபம் போட்டவர், அரசியல் எடுத்துக்காட்டு படத்தை தந்தவர் என்றெல்லாம் புகழ்ந்து பேச, ஏ.ஆர்.முருகதாஸ் திக்குமுக்காடி போய் அமர்ந்திருந்தார்.
விஜய் பற்றி பேசி ஏ.ஆர்.முருகதாசை திக்குமுக்காட வைத்த படக்குழுவினர்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தேர்தலில் போட்டியிட்டு வென்று, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜய்யின் திரைப்பயணத்தில் 'சர்கார்' படம், அவரது அரசியல் பயணத்துக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார்.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ஏ.ஆர்.முருகதாசிடம் பலரும் கருத்துக்கேட்க முயன்றும், அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை.

இந்தநிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பலரும் விஜய்க்கு அரசியல் தூபம் போட்டவர், அரசியல் எடுத்துக்காட்டு படத்தை தந்தவர் என்றெல்லாம் புகழ்ந்து பேச, ஏ.ஆர்.முருகதாஸ் திக்குமுக்காடி போய் அமர்ந்திருந்தார்.

பின்னர் அவர் பேசும்போது, 'சர்கார்' படம் வெளியான சமயம் பட்ட வேதனையும், சோதனையும் கொஞ்சமல்ல. கருப்பு கண்ணாடி போட்ட காருக்குள் அமர்ந்து ஊருக்குள் சுற்றி வந்தேன். என் முன்னாலேயே தியேட்டரில் இருந்த 'சர்கார்' பட பேனர்களை போலீசார் கிழித்து எறிந்தனர். இதையெல்லாம் பார்த்து வேதனை பட்டு போனேன் என்று வருத்தம் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com