ஜி.வி.பிரகாஷை கட்டிப்பிடித்து அழுத ரசிகை

ரசிகையின் பேச்சு அடங்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் ஜிவி பிரகாஷ்.
ஜி.வி.பிரகாஷை கட்டிப்பிடித்து அழுத ரசிகை
Published on

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த படம் ‘ஹேப்பி ராஜ்’. படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து படத்தின் புரமோசன்களுக்காக பட குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களை ஜி.வி.பிரகாஷ் மற்றும் பட குழுவினர் சந்தித்தனர். அப்போது ரசிகை ஒருவர் அழுது கொண்டே வந்து ஜி.வி.பிரகாசை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

மேலும் அந்த ரசிகை படத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எல்லோரும் அவரவர் அப்பாவை இருக்கும் போதே மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லாத போது படையல் போட்டு எந்தப் பயனும் இல்லை. பெண் குழந்தைகள் பிறந்ததிலிருந்தே அப்பாக்களுடன் நன்கு ஒன்றிக்கொள்வார்கள். ஆனால் ஆண் மகன்கள் மிகவும் எளிதாக அப்பாக்களை புரிந்து கொள்வதில்லை என பேசினார். ரசிகையின் பேச்சு அடங்கிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் ஜிவி பிரகாஷ்.

இந்த வாழ்த்துக்களும் வார்த்தைகளும் போதும் சகோதரி. இவை 1000 விருதுகளுக்கு சமம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com