ஜனநாயகன் திரைப்படம் லீக்: படத்தொகுப்பாளர் சஸ்பெண்ட்

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜனநாயகன் திரைப்படம் லீக்: படத்தொகுப்பாளர் சஸ்பெண்ட்
Published on

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது.

புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக முக்கிய குற்றவாளி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ப்ரீலேன்சர் அசிஸ்டண்ட் விஷ்வல் எடிட்டர் மூலமாக ஜனநாயகன் சமூக வலைதளங்களில் கசிந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், எடிட்டர் யூனியனில் இருந்து எடிட்டர் பிரதீப் ராகவ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். படம் வெளியானதற்கு அவர் காரணம் இல்லை என்றாலும், கவனக்குறைவாக செயல்பட்டுள்ளார். விதிகளை மீறி சங்க உறுப்பினர் அல்லாதோரை உதவியாளராக பயன்படுத்தி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com