‘படையப்பா + வேட்டையாடு விளையாடு’ கலவையில் ‘தர்மன்’- இயக்குநர் கொடுத்த ஹின்ட்

பட தலைப்பு தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து- தர்மன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
Published on

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘தர்மன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இப்படவிழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை சிம்ரன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பட தலைப்பு தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. ‘படையப்பா’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் கலவையாக ‘தர்மன்’ படம் இருக்கும். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன என்றார்.

பொழுதுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com