முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்

‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என விஜயை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசின் இந்த சந்திப்பு அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தேர்தலில் போட்டியிட்டு வென்று, தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். விஜய்யின் திரைப்பயணத்தில் 'சர்கார்' படம், அவரது அரசியல் பயணத்துக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.

விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, ஏ.ஆர்.முருகதாசிடம் பலரும் கருத்துக்கேட்க முயன்றும், அவர் எந்த கருத்தும் சொல்லவில்லை.

இந்தநிலையில், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என விஜயை வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசின் இந்த சந்திப்பு அரசியல் மற்றும் திரைத்துறையினர் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜய்- இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com