தனுஷ் இயக்கிய திரைப்படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தனுஷ் இயக்கிய திரைப்படம் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்?
Published on

ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஏற்கனவே திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட தேதியில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் முன்கூட்டியே வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் மற்றும் விடாமுயற்சி என இரண்டு திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com