Coolie FDFS: குடும்பத்துடன் கூலி படம் பார்த்த சிவகார்த்திகேயன்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது.
Coolie FDFS: குடும்பத்துடன் கூலி படம் பார்த்த சிவகார்த்திகேயன்
Published on

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது. கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. திரையரங்கை ரசிகர்கள் அதிரவிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சிறப்பு காட்சி 9 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையரங்குகளில் கூலி படத்தை கண்டு வருகின்றனர்.

அவ்வகையில், சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் கூலி படத்தை கண்டு ரசித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ், சாண்டி ஆகியோர் வெற்றி திரையரங்குகளில் படத்தை ரசிகர்களுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சத்யம் திரையரங்கில் அவரது மனைவி மற்றும் குடும்பத்துடன் படத்தை பார்த்தார் .

X

Maalai Malar
www.maalaimalar.com