முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி- நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பில் அமரன் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.அமரன் படத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் திரையில் கண்டு களித்தனர்.
முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி- நன்றி தெரிவித்த கமல்ஹாசன்
Published on

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

அமரன் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு படக்குழுவினர் சிறப்பு திரையிடல் செய்தனர். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

அமரன் படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய அழைப்பை ஏற்று படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணை முதல்வர், என் அன்பு இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி. என பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com