

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் திரைப்பிரபலங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
விஜய் எனது நல்ல நண்பர். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது பயணம் தொடர்ந்து நல்லபடியாக அமையட்டும்.
முதலமைச்சர் விஜய்க்கு எனது மனதார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இந்த நிலைக்கு அவரை கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்து அவரின் வெற்றிகள் சாத்தியமாகட்டும்.
எனது நெருக்கமான நண்பர், விஜய். எனது படங்களின் ரீமேக்குகளில் என்னைவிட சிறப்பாகவே நடித்து அசத்தினார். அரசியலிலும் ஜொலித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள். சினிமா தாண்டி அரசியல் பயணமும் அவருக்கு வெற்றிகளை குவிக்கட்டும்.
தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜய். முதலமைச்சர் அரியணையில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
எனது நல்ல நண்பரும், முதலமைச்சருமான விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நல்ல முயற்சிகள் தொடர்ந்து பலன் தரட்டும். நல்லதே நடக்கட்டும்.
எனது உரிமையான சகோதரரான விஜய், இப்போது முதலமைச்சர். சினிமாவில் அவர் ஜொலித்தது போல அரசியல் உலகிலும் மிளிர்வார் என்று நம்புகிறேன். அவருக்கு என் இனிய வாழ்த்துகள்.
எனக்கு பிடித்தமான நடிகர்களில் விஜய் முக்கியமானவர். விடாமுயற்சிக்கும், கடின உழைப்புக்கும் சொந்தக்காரர். அவரது பிறந்தநாளில் இன்னும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.
மிகச்சிறந்த நடிகர். மிகச்சிறந்த மனிதர். நல்ல உள்ளம் கொண்டவர். கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று இந்த இடத்தை அடைந்திருக்கிறார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
முதலமைச்சர் விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் அவர் நினைத்தது அத்தனையும் வெற்றியாகவே அமையட்டும். இறைவன் அருள் கிடைக்கட்டும்.
விஜய் உண்மையிலேயே சிறப்பான நபர். அனைவரிடமும் ஒரேமாதிரியாக பழகக்கூடியவர். நல்ல மனிதர். படப்பிடிப்பு தளத்தில் அமைதியாகவே காணப்படும் நபர் அவர். இந்த அமைதியும், கடின உழைப்பும்தான் அவரது வெற்றிக்கு காரணம். அவருக்கு என் வாழ்த்துகள்.
விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முதலமைச்சராக அவரது பணிகள் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடன் நடித்தது சிறப்பான அனுபவம்.
என் அன்பு நண்பர், முதலமைச்சர் விஜய்க்கு என் இனிய வாழ்த்துகள். இறைவன் அருளால் இன்னும் உயரங்களை அவர் எட்டுவார்.