நீலாம்பரியாக ஐஸ்வர்யா ராய்.. சிவாஜிக்கு அதிக சம்பளம் - ரஜினி பகிர்ந்த படையப்பா மெமரீஸ்!

ஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.நீலாம்பரி கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படமே ஹிட் அடிக்கும்.
நீலாம்பரியாக ஐஸ்வர்யா ராய்.. சிவாஜிக்கு அதிக சம்பளம் - ரஜினி பகிர்ந்த படையப்பா மெமரீஸ்!
Published on

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

இதனை முன்னிட்டு படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்துகொள்ளும் வீடியோவை சௌந்தர்யா ரஜிகாநாத் பகிர்ந்துள்ளார்.

அதில் பேசும் ரஜினிகாந்த், நீலாம்பரி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வெண்டுமென விரும்பினேன். ஏனெனில் அவரது கண்கள் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

எவ்வளவோ முயன்றோம், பல மாத காத்திருப்பிற்குப் பிறகு அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை எனத் தெரிந்ததும் வேறு நடிகைக்குச் சென்றோம்.

தெலுங்கில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனை ரவிக்குமார் என்னிடம் அறிமுகம் செய்தார். எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. அரைமனதாகவே இருந்தது.

அந்த நீலாம்பரி கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படமே ஹிட் அடிக்கும்.

சிறிது எடையைக் கூட்டினால் நன்றாக இருக்குமென ரவிக்குமார் சார் என்னை சமாதானம் செய்தார். பின்னர் லுக் டெஸ்ட் எடுத்தோம். எல்லாமே நன்றாக நடந்தது.

அதேபோல் தந்தையாக சிவாஜி சாரை நடிக்க வைக்கலாம் என்றேன். அவரிடம் சம்மதம் வாங்கிய பிறகு, ஐந்து நாள் படப்பிடிப்புக்கே அவர் அதிகமாக சம்பளம் கேட்டதாக ரவிக்குமார் கூறினார்.

முதலில் சம்பளம் பேசிவிட்டு கதை சொல்லியிருந்தால் பரவாயில்லை. கதை சொல்லிவிட்டு சம்பளத்திற்காக இப்படி செய்தால் தவறாகிவிடும் என அடுத்த நாளே முழு சம்பளமும் கொடுத்தோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com