என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    #Vijay 3-வது மனுஷியின் 3-ம் தரமான டுவிட்: திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டது தவறு- பார்த்திபன் கருத்தால் மீண்டும் சர்ச்சை
    X

    #Vijay 3-வது மனுஷியின் 3-ம் தரமான 'டுவிட்': திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டது தவறு- பார்த்திபன் கருத்தால் மீண்டும் சர்ச்சை

    • தவறு செய்பவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.
    • இப்படி ஒரு டுவிட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.

    நடிகர் பார்த்திபன் சில தினங்களுக்கு முன்பு திரிஷா குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையானதால் திரிஷா அவருக்கு கண்டனம் தெரிவித்தார். தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு பார்த்திபன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பார்த்திபன் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறியதாவது:-

    திரிஷாவை நான் பாராட்ட வேண்டும் என்று நினைத்தேன். இந்த நேரத்தில் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி வந்திருக்கிற திரிஷாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    என்னதான் நாம் ஷார்ப்பா... புத்தி கூர்மையாக பேசினால் கூட மைக்கில் பேசி விட்டதால் புத்திசாலிதனம் ஆகி விடாது என்ற பழி நம் மீது இருக்கிறது. அதனால் நான்கூட முட்டாள் தனமா பேசினால் கூட புத்திசாலிதனமா டிரான்ஸ்லேட் பன்னிக்கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. ஓகே.

    ஹாய் பிரெண்ட்ஸ் நல்லா இருக்கிங்களா? தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்பவன் திருந்த பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

    அதே மாதிரிதான் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்பது ஒரு விதம். மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியை தவறு நடந்து விட்டதாக உணர்கிறேன். உண்மையில் அது தவறிதான் நடந்தது.

    நான் மேடையில் விஜய், அஜித்தை பற்றி பேசும்போது வேறு ஒரு புகைப்படம் வந்தது. அதை பார்த்ததும் உண்மையில் நான் திகைத்து போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே அந்த போட்டோவை நான் போட சொல்லி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது 100 சதவீதம் பொய்.

    ஏனெனில் மகளிர் தினம் அன்று. நான் யாரை பற்றி பேசுவேன் என்றால் அன்னை தெரசா, வேலு நாச்சியாரை பற்றி பேச ஆசைப்படுறேன். அதை விடுத்து நான் இப்படி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரியில்லை.

    இந்த விவகாரம் குறித்து நான் மன்னிப்பு கேட்ட பிறகு திரிஷா ஒரு டுவிட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த போட்டோவை போட சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு டுவிட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.

    அது ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான டுவிட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன்.

    ஆனால் அது எதற்குமே பதில் சொல்லாமல் எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்த காரணத்தால் நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என நிறைய பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன் என்று நிறைய பேர் குரூப் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு நன்றி"

    இவ்வாறு பார்த்திபன் வீடியோவில் கூறியுள்ளார்.



    Next Story
    ×