TN Assembly Election| ஜனநாயக கடைமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு சென்ற விமானத்தில் 90 சதவீதம் பேர் வாக்களிக்க வந்ததாக கூறும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
TN Assembly Election| ஜனநாயக கடைமையை நிறைவேற்ற சென்னை திரும்பிய அஜித்
Published on

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருபவர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு சென்ற விமானத்தில் 90 சதவீதம் பேர் வாக்களிக்க வந்ததாக கூறும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகரும், ரேசருமான அஜித்குமார் தற்போது சென்னை திரும்பியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது அணி பெல்ஜியத்தில் நடைபெறும் உலகின் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் கலந்து கொண்டு இரண்டாவது இடம் பிடித்தது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவதற்காக நடிகர் அஜித் சென்னை திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com