"ஜனநாயகன்" படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை..?

இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை… உழைப்பை மதிக்காத மனநிலை.
"ஜனநாயகன்" படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை..?
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படம் சான்றிதழ் காரணமாக வெளியாகாமல் இருந்த நிலையில் இணையத்தில் முழு படமும் வெளியாகி படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முழு படமும் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு பலரும் கண்டனமும், படக்குழுவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"ஜனநாயகன்” படம் வெளியாவதற்கு முன் கசிந்திருப்பது தவறு இல்லை… நேரடியான திருட்டு.

இது ஒரு படத்தை மட்டும் பாதிக்காது…

நூற்றுக்கணக்கான மனிதர்களின் உழைப்பையும் வாழ்க்கையையும் தாக்கும் செயல்.

இது சினிமா பிரச்சனை மட்டும் இல்லை…

உழைப்பை மதிக்காத மனநிலை.

இதற்கு ஒரே பதில் கடுமையான நடவடிக்கை.

நாங்கள் உருவாக்குவது படம் இல்லை… நம்பிக்கை.

அதை காக்குவது பொறுப்பு இல்லை… கடமை என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com