சக்திவாய்ந்த என்ஜினுடன் ரிலீசுக்கு ரெடியாகும் யமஹா RX100

புதிய மாடல் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
சக்திவாய்ந்த என்ஜினுடன் ரிலீசுக்கு ரெடியாகும் யமஹா RX100
Published on

யமஹா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிள் RX100. இந்திய சந்தையில் அதிக பிரபலமாக விளங்கிய RX100 மோட்டார்சைக்கிள், புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், யமஹா RX100 புதிய மாடல் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. லீக் ஆகி இருக்கும் புகைப்படத்தின் படி புதிய RX100 மோட்டர்சைக்கிளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மொபைல் கனெக்டிவிட்டி, மொபைல் சார்ஜிங் வசதி, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

புதிய RX100 மாடலில் 225சிசி பி.எஸ்.6 ஃபேஸ் 2 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய யமஹா RX100 விலை இந்தியாவில் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் முதல் துவங்கும் என்று தெரிகிறது.

இந்த பைக்கின் செயல்திறன் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இது விற்பனையில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், புதிய யமஹா RX100 அம்சங்கள் மற்றும் வெளியீடு தொடர்பாக சமீபத்தில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com