தமிழ்நாடு

ஆயுதபூஜை, விஜயதசமி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாட்களை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த 3 நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களில் சரஸ்வதி தேவி யையும் மக்கள் பக்தியோடு வணங்கி வழிபடுவார்கள்.

ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில், மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜையாகும்.

அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும்

விஜயதசமி திருநாளில் தொடங்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜய தசமி பண்டிகையாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜய தசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும் என்ற  எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், டிடிவி தினகரன்

இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன், ஜி.எஸ்.டி.யு.சி. தலைவர் மு.பன்னீர் செல்வம், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், தமிழ்நாடு பண்பாட்டை தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம. நாராயணன் ஆகியோரும் வாழ்த்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் உடல் - மாலை நல்லடக்கம்
சென்னையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று இறுதி சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான மாங்காட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் பிறந்த தேவா, 1986-ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கரை மன்னாரு திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதையடுத்து 1990-இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம், இசையமைப்பாளர் தேவாவிற்கு முதல் மாநில திரைப்பட விருதை பெற்று தந்தது.

இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், ராமராஜ், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட் பல திரைப்பிரபலங்களின் படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலமைச்சர் அஞ்சலி

இதையடுத்து தேவாவின் இறப்பிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள தேவா வீட்டிற்கு நேற்று வந்த தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அவரது இறுதி அஞ்சலி முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, சென்னை டி.நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி வரை திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தனது தந்தையின் உடல் வைக்கப்படும் என தெரிவித்தார்.

சொந்த ஊரில் அடக்கம்

இந்த நிலையில், இன்று மதியம் 12 மணியளவில் இசையமைப்பாளர் தேவாவின் உடல், சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகில் உள்ள மாங்காடு கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

தேவாவின் உடல் மாங்காடு கிராமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை முதல்-அமைச்சர் விஜய் மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்: மாநகராட்சி கமிஷனர் சமீரன் தகவல்
சென்னையில் நேற்று இரவு மாநகராட்சி கமிஷனர் சமீரன் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னையில் இரவு எதிர்பாராத விதமாக மிக அதிக மழை ெபய்தது. வட சென்னை பகுதிகள் மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருந்தது.

பாரிமுனை, மணலி, திருவொற்றியூர், சாத்தான்காடு, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 5 மணிநேரம் வரையில் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரையில் 70 செ.மீ. வரை  சராசரியான மழை அளவாக இருக்கும். ஆனால் நேற்று இரவு ஒரே நாளில் பாரிமுனையில் 36 செ.மீ. மழை பொழிந்தது.

மழை பாதிப்புகளை சரி செய்ய 15 ஆயிரம்

சூப்பர் எல்நினோ காரணமாக வடகிழக்கு பருவ மழை பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வானிலை ஆய்வு மையமும் அதிகனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒரே நாளில் இவ்வளவு மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாநகராட்சி களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 15 ஆயிரம் பேர் மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகளும் இரவில் பணியில் இருந்தனர்.

முதல்-அமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார்

பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இரவு 2.30 மணியளவில் கட்டப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். முதல்-அமைச்சர் விஜய் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மழை நிலவரம் பற்றி கேட்டறிந்தார். அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து மழை பாதிப்பை சரி செய்து வருகிறோம். பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவில் தத்தளித்த சென்னை: பெரும்பாலான இடங்களில் விடிவதற்குள் அகற்றப்பட்ட மழைநீர்
சென்னையில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த அதி கனமழை காரணமாக 280 இடங்களில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் அதனை சரி செய்வதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் சமீரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேங்கிய மழை நீைர வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக ராட்சத ஜெனரேட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

273 இடங்களில் மழைநீர் அகற்றம்

இதனால் இன்று காலைக்குள் 273 இடங்களில் மழைநீர் முற்றிலுமாக அகற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் சமீரன் தெரிவித்தார். 9 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டது. இரவில் கொட்டிய மழை காரணமாக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருந்தன. ஆனால் முகாம்களுக்கு பொதுமக்கள் யாரும் தஞ்சம் அடையவில்லை. மழை வெள்ளத்தை உடனடியாக அகற்றியதே இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

13,500 பேருக்கு காலை உணவு

இருப்பினும் இன்று காலையில் 13,500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உஷார் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்- 18 அக்டோபர் 2026
போட்டி அட்டவணைகளால் பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை: சஞ்சு சாம்சன் குமுறல்

* மழை காரணமாக 5வது மற்றும் கடைசி டி20 போட்டி கைவிடப்பட்டது.

* இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்

* மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு..,

* மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

14 மணி நேர விசாரணை...200 கேள்விகள்..; கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி!...

*'ஜெம்' வீரமணியிடம், 14 மணி நேரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஜெம்' வீரமணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

*என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள். இப்போது என்னை கைது செய்வது ஏன்? என்று அவர் கதறி அழுதார்.

த.வெ.க.-வின் 3-வது மாநில மாநாடு: திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டம் எனத் தகவல்

* த.வெ.க. முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தியது

* மதுரையில் 2-வது மாநாடு நடத்தப்பட்டது

ஒரு நாள் இரவு மழைக்கே வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை: என்ன செய்யப் போகிறது தவெக அரசு?- டி.டி.வி. தினகரன்
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர வேண்டும்

சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் ஜோசப் விஜய், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முத்தாரம்மன் உக்கிரமாக மாறி சூரனை அழிக்கும் பிரமாண்டமான சூரசம்ஹாரம்
வரங்கள் பல பெற்று ஆணவத்துடன் வாழ்ந்து வந்த மகிஷாசூரன் என்ற எருமை முகம் கொண்ட அரக்கன், தேவர்களையும் முனிவர்களையும் சித்திரவதை செய்து வந்தான். அவனது அக்கிரமங்களை அடக்க நினைத்த அன்னை முத்தாரம்மன், கோபத்தின் உச்சமாய் மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுத்தாள்.

விஜயதசமி அன்று சூரனை வதம் செய்யும் அன்னை

9 நாட்கள் போருக்குப்பின், 10-ம் நாளான விஜயதசமி அன்று சூரனை அன்னை வதம் செய்தாள். இதனை நினைவூட்டும் விதமாகவே குலசையில் சூரசம்ஹாரம் நிகழ்த்தப்படுகிறது. 9 நாட்கள் பல்வேறு கோலங்களில் காட்சியளித்த அம்மன் 10-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் போர்க்கோலம் பூண்டு கடற்கரையை நோக்கிப் புறப்படுவார்.

குலசேகரப்பட்டினம் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக அம்பாள் எழுந்தருளுவார். அதே நேரத்தில் லட்சக்கணக்கான காளி வேடமிட்ட பக்தர்கள் அம்மனைச் சூழ்ந்து நின்று, “ஓம் சக்தி, பராசக்தி” என முழக்கமிடுவர்.

சூரசம்ஹாரத்தின்போது மகிஷாசூரன் 4 வெவ்வேறு மாய உருவங்களை எடுத்து அன்னையோடு போரிடுவான். அன்னை ஒவ்வொரு தலையாகக் கொய்து அவனது ஆணவத்தை அடக்குவாள்.

நான்கு அவதாரம்

மகிஷன் (மனித) தலை: முதலில் அசுரன் தனது சுயரூபமான அசுர வடிவில் வந்து போரிடுவான். அன்னை தனது சூலாயுதத்தால் அவனது முதல் தலையைக் கொய்து வதம் செய்வார்.

சிங்க முகத் தலை (சிம்மத் தலை): மனித வடிவம் அழிந்தவுடன், அசுரன் அடுத்ததாக உக்கிரமான சிங்கத்தின் முகத்தோடு தோன்றுவான். அன்னை அவனது சிங்க முகத் தலையையும் துண்டிப்பார்.

எருமை முகத் தலை: சிம்ம முகம் வீழ்ந்ததும், அவன் தனது மூல வடிவமான எருமைத் தலையுடன் (மகிஷாசூரன் என்ற பெயருக்குக் காரணமான வடிவம்) ஆக்ரோஷமாகப் போரிடுவான். அன்னை அவனது இந்த எருமைத் தலையையும் வதம் செய்வார்.

சேவல் உருவம்: இறுதியாக அனைத்து வடிவங்களும் அழிய, அன்னைக்கு அஞ்சி தப்பிப்பதற்காக ஒரு சிறிய சேவல் உருவமெடுத்து மாயமாகத் தோன்றுவான். அன்னை அவனது அந்தச் சேவல் உருவத்தையும் வதம் செய்து, அவனது உடலைத் தன் காலடியில் ஆட்கொள்வார்.

கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் போது, அசுரனின் பிரம்மாண்ட உருவப் பொம்மையில் இந்த நான்கு தலைகளும் வரிசையாக மாற்றப்பட்டு, அன்னை முத்தாரம்மனின் சூலாயுதத்தால் ஒவ்வொன்றாக வதம் செய்யப்படுவது ஆன்மீக மரபாகும்.

முன்னதாக சூரசம்ஹாரத்துக்கு அன்னை முத்தாரம்மன் புறப்படும்போது கோபத்தின் உச்சமாய் தீமைகளை வதம் செய்யும் மகிஷாசுரமர்த்தினி (காளி) என்ற உக்கிரமான கோலத்தில் எழுந்தருள்கிறார். அன்னைக்கு உக்கிரத்தை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான ரத்த சிவப்பு குங்கும திலகம், ஆக்ரோஷமான கண்கள் மற்றும் ஆபரணங்கள் சூட்டப்பட்டு போர்க்கோலத்தில் புறப்படுவார்.

அன்னை போர்க்களத்துக்கு தனித்து செல்லாமல் தனது வாகனமான சிம்ம வாகத்தில் ஏறி புறப்படுவார். சூரசம்ஹாரத்தில் அன்னை பயன்படுத்தும் ஆயுதம் சூலாயுதம் ஆகும். இதன் மூன்று கூர்முனைகளும் இச்சை, கிரியை, ஞானம் ஆகிய முச்சக்திகளையும், மனிதனின் அகங்காரம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அழிப்பதை குறிக்கின்றன.

சூலாயுதம் தவிர அன்னை முத்தாரம்மன் வாள் மற்றும் கேடயம் (அசுரனின் தந்திரங்களை எதிர்கொள்ளவும், வெட்டி வீழ்த்தவும்), பாசம்-அங்குசம்(அசுரனின் மாய உலகை கட்டி இழுத்து டக்க), மணி(அசுரர்களை நிலைதடுமாறச் செய்யும் ஒலியை எழுப்ப) கைகளில் ஏந்தி செல்வார்.

அன்னை முத்தாரம்மன் சூலாயுதத்தை கைகளில் ஏந்தி அசுரனின் தலைகளை ஒவ்வொன்றாக கொய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தி வதம் செய்த பின்னர் அவனது ரத்தம் பூமியில் படாமல் இருக்க தன் கைகளில் ஏந்தி உலகை காப்பவளாக அன்னை காட்சியளிப்பாள்.

மகிஷா சூரசம்ஹாரத்தின் போது கடற்கரையில் திரளும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் காளி ஆட்டமும், மேள தாள முழக்கங்களும் அந்தப் பகுதியையே பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும். மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நிகழ்வினை காணக்கண்கோடி வேண்டும்.

சூரசம்ஹாரம் முடிந்ததும், உக்கிரமாகக் காணப்படும் அன்னையின் கோபத்தைத் தணிப்பதற்காக சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பு அதிகாலை 2 மணியளவில் சாந்தாபிஷேக ஆராதனை நடைபெறும். அன்னையின் உடலிலும் மனதிலும் எழுந்துள்ள போர்க்கோல ஆக்ரோஷ வெப்பத்தைத் தணிப்பதற்காக, இயற்கையிலேயே குளிர்ச்சித் தன்மை கொண்ட 9 வகையான மங்கலத் திரவியங்கள் கொண்டு இந்தச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

அன்னையின் உக்கிர உஷ்ணத்தைக் குறைக்க குளிர்நீரும் பன்னீரும், அம்பாளை நல்மன நிலைக்குக் கொண்டுவர பசும்பால் மற்றும் தயிர், தாகம் மற்றும் களைப்பைத் தீர்க்க இளநீர் மற்றும் கரும்புச்சாறும், நறுமணமூட்டி அன்னையை முழுமையாக சாந்தமாக்க சந்தனம் மற்றும் ஜவ்வாதும் இறுதியில் ஞானத்தின் அடையாளமாக விபூதி (திருநீறு) கொண்டு சாந்த அபிஷேகம் நடைபெறும்.

அபிஷேகங்கள் அனைத்தும் நிறைவடைந்ததும், அன்னைக்குத் தூய வெள்ளை நிற உடையும், குளிர்ச்சியான மல்லிகைப் பூ மாலைகளும் அணிவிக்கப்பட்டுச் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு, தீமைகளை அழித்துக் காத்து நின்ற அன்னைக்குத் தூப தீபங்கள் காட்டி, மகா தீபாராதனை செய்யப்படும்.

இந்த ஆராதனையின் போது அன்னை தனது உக்கிரத்தை முழுமையாகத் துறந்து, பக்தர்களுக்கு அருள்மழை பொழியும் மகா கருணை நிறைந்த சாந்த சொரூபியாக (சாந்தக் கோலம்) காட்சியளிப்பார்.

அன்னையின் கோபம் தணிந்து சாந்தாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, அதுவரை கடற்கரையில் விழித்திருந்து “ஓம் சக்தி” முழக்கமிட்ட லட்சக்கணக்கான பக்தர்களும் மன அமைதி அடைவார்கள். அதன் பின்னரே பக்தர்கள் கடலில் நீராடி, பூசாரிகள் மூலம் தங்களது காப்புகளை அவிழ்த்து முறைப்படி தங்களின் 41 நாள் கடுமையான விரதத்தை நிறைவு செய்வார்கள்.

மொத்தத்தில் உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா என்பது வெறும் அசுர வதத்தைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல. அது ஆழமான ஆன்மிக, தத்துவார்த்த மற்றும் சமூக உண்மைகளை மனிதகுலத்திற்கு உணர்த்துகிறது. நம் ஒவ்வொருவர் மனதிலும் நம்மை அறியாமலும், அறிந்தும் குடிகொள்ளும் அசுரனை அழித்து தர்ம சிந்தனையையும், அன்பையும்,ஆனந்தத்தையும் கொண்டுவரும் வெற்றித்திருநாளாகவே அமைகிறது.

வெளுத்து வாங்கிய கனமழை - சென்னை திரும்ப பொறுப்பு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு
சென்னையில் நேற்று பல இடங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 பேர் உடனடியான சென்னை வருமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின்  பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இதன்படி சென்னையில் வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தவெக அமைச்சர்களான அருண்ராஜ், ரமேஷ், விக்னேஷ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்செல்வன், பிரபு, தமிழன் பார்த்திபன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பு அமைச்சர்கள்

திருவொற்றியூர் மற்றும் மணலி - அமைச்சர் ரமேஷ்

தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்

ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் - அமைச்சர் அருண்ராஜ்

அம்பத்தூர் அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டை - அமைச்சர் விஜய பாலாஜி

கோடம்பாக்கம் மற்றும் வலசரவாக்கம் - அமைச்சர் பிரபு

ஆலந்தூர் மற்றும் அடையார் - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் - அமைச்சர் விக்னேஷ்

இவர்கள் உடனடியாக சென்னை திரும்பி, மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

14 மணி நேர விசாரணை...200 கேள்விகள்..; கண்ணீர் விட்டு கதறிய ‘ஜெம்’ வீரமணி!
'ஜெம்' வீரமணியிடம், 14 மணி நேரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 'ஜெம்' வீரமணி கண்ணீர் விட்டு கதறி அழுதபடி, பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரால் சீரழிக்கப்பட்ட 10 சிறுமிகள், இதுவரை அவர்மீது சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். ரகசிய விசாரணை மூலம் அவர்களது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 6 போக்சோ வழக்குகள் உள்பட 7 வழக்குகள் வீரமணி மீது போலீசார் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கில் சிறுமியை தற்கொலை செய்ய தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளில், 4 வழக்குகளில் வீரமணி கைதாகி உள்ளார். அதில் ஒரு வழக்கு மதுரையில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிறப்பு புலனாய்வு படை போலீசார், 3 பிரிவுகளாக பிரிந்து வீரமணி மீதான வழக்குகளை விசாரித்து வருகிறார்கள்.

ஒரு பிரிவினர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கை முறையாக விசாரிக்காமல், வீரமணி மீதான வழக்கை கோர்ட்டில் முடித்து வைத்தது குறித்து 2-வது பிரிவு விசாரிக்கிறது. 3-வது பிரிவு வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ரூ.120 கோடி அளவுக்கு பணம் கைமாறியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

கைது நடவடிக்கை அறிந்து கதறல்

வீரமணி கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியன்று கைது செய்யப்பட்டார். 84 வயது நிரம்பிய அவரை கைது செய்து, போலீசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துவந்தனர். கைது செய்யப்பட்ட விவரம், முதலில் அவருக்கு தெரியாது. விசாரணைக்காகவே அழைத்து செல்கிறோம் என்று அவரிடம் போலீசார் கூறியுள்ளனர். கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தவுடன், அவர் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தேம்பி, தேம்பி அழுதபடி காரை விட்டு இறங்க மறுத்தார். என்னிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கினார்கள். இப்போது என்னை கைது செய்வது ஏன்? என்று அவர் கதறி அழுதார். போலீஸ் விசாரணைக்கும் அவர் ஒத்துழைக்க மறுத்தார். இதனால் கைது செய்தபோது, அவரிடம் சரியாக போலீசாரால் விசாரணை நடத்தமுடியவில்லை.

எனவே 3 நாட்கள் போலீஸ் காவலில் ஏற்கனவே புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரித்தார்கள். அப்போது வழக்கு விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொன்ன தகவலின்பேரில்தான், அவர் ரகசியமாக எழுதி வைத்திருந்த டைரியையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் யார், யாருக்கு எவ்வளவு பணம்கொடுத்தார் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன.

அதன் அடிப்படையில்தான் தற்போது போலீஸ் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், வீரமணியால் சீரழிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தற்கொலை செய்துகொண்டது குறித்து வீரமணியிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. இதற்காக மீண்டும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து, சிறையில் வைத்து வீரமணியிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றுடன் வீரமணியிடம் சிறை காவல் விசாரணை முடிந்தது.

14 மணி நேரம் விசாரணை

வீரமணியிடம் கடந்த 2 நாட்களாக. மொத்தம் 14 மணி நேரம் சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். உதவி கமிஷனர் காயத்ரி தலைமையிலான போலீசார், 200 கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமிகளை சீரழித்தது எப்படி? வழக்கை முடித்துவைக்க யார். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? குறிப்பிட்ட ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகள் உங்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அந்த தங்கக்கட்டிகள் யாருக்கு கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரித்ததாக கூறப்படுகிறது.

200-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த சாட்சிகள் சொன்ன தகவல்கள் குறித்தும் வீரமணியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் வீரமணி பற்றிய செய்திகள் பரபரப்பாக வெளியான வண்ணம் உள்ளது. அதில் உள்ள தகவல்களையும் வீரமணியிடம் காட்டி, அதில் உள்ள உண் மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரித்ததாக தெரிகிறது. வீரமணியிடம் போலீஸ் காவல் விசாரணை முடிந்துவிட்டதா ? என்று சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தேவைப்பட்டால் மீண்டும் விசாரிப்போம்' என்று தெரிவித்தனர். 'ஐகோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை உள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக தேவை இல்லாத கருத்துகளை வெளியிட வேண்டாம்' என்று சிறப்பு புலனாய்வு படை போலீ சார் கேட்டுக்கொண்டனர்.

திருச்சி, புதுக்கோட்டை, கரூரில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
வட–கி–ழக்கு பரு–வ–மழை தொடங்–கி–யதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்–க–ளாக பல பகு–தி–களில் பர–வ–லாக மழை பெய்து வரு–கிறது.

சாலைகளில் வெள்ளம்

திருச்–சி–யில் நேற்று பக–லில் வானம் மேக–மூட்–டத்–து–டன் காணப்–பட்ட நிலை–யில், மாலை 6 மணிக்கு இடி, மின்–ன–லு–டன் பலத்த மழை பெய்–தது. இந்த மழை இரவு 11 மணிக்கு மேலும் நீடித்–தது. இந்த மழை கார–ண–மாக திருச்சி ஜங்–ஷன் ரெயில் நிலை–யம், அரிஸ்டோ மேம்–பா–லம், டி.வி.எஸ்.டோல்–கேட், பாலக்–கரை உள்–ளிட்ட பகு–தி–களில் மழை–நீர் சாலை–களில் பெருக்–கெ–டுத்து ஓடியது.

இந்த மழை–யால் ஆயு–த– பூ–ஜைக்கு பொருட்–கள் வாங்க சென்–ற–வர்–கள் கடும் அவதி அடைந்–த–னர். மேலும் மழை கார–ண–மாக பிரதான சாலை–களில் மழை–நீர் தேங்–கி–ய–தால் வாக–னங்–கள் ஊர்ந்து சென்–றன. டி.வி.எஸ். டோல்–கேட், பழைய பால்–பண்ணை, காந்தி மார்க்–கெட், தஞ்–சா–வூர் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் கடும் போக்–கு–வ–ரத்து நெரி–சல் ஏற்–பட்–டது.

புதுக்கோட்டை

புதுக்–கோட்டை மாந–கர பகு–தி–களில் நேற்று மாலை இடி மின்–ன–லு–டன் பலத்த மழை பெய்ய தொடங்–கி–யது. இந்த மழை இரவு 7 மணி வரை நீடித்–தது. இந்த கன– ம–ழை–யி–னால் புதுக்–கோட்டை மாவட்ட கலெக்–டர் அலு–வ–ல–கம், புதிய பஸ் நிலை–யம் மற்–றும் பழைய பஸ் நிலை–யம் உள்–ளிட்ட முக்–கி–யச் சாலை–களில் மழை–நீர் பெருக்–கெ–டுத்து ஓடி–யது. சாலை–களில் சென்ற வாகன ஓட்–டி–கள், மழை–யில் நனைந்–த–படி சென்–ற–னர்.

புதுக்–கோட்டை புதிய பஸ் நிலை–யத்–தில் மழை–நீர் குளம்–போல் தேங்கி நின்–ற–தால் பயணி–கள் அவ–தி–ய–டைந்–த–னர். இந்–தக் கன–ம–ழை–யால் வெப்–பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி–ய–தால் பொது–மக்–கள் மகிழ்ச்–சி–ய–டைந்–த–னர்.

பயிர்கள் மூழ்கின

கரூர் மாவட்–டம் குளித்–தலை மற்–றும் அதன் சுற்–று–வட்–டார பகு–தி–களில் கடந்த 2 நாட்–க–ளாக இரவு நேரத்–தில் கன–மழை பெய்–தது. இத–னால் வாழை, நெல் சாகு–படி செய்த வயல்–களில் மழை நீர் புகுந்–தது. தற்–போது குளித்–தலை பகு–தி–யில் சம்பா நெல் சாகு–படி நடை–பெற்று வரு–கிறது.

இந்–நி–லை–யில் கணக்–கப்–பிள்–ளை–யூர், பணிக்–கம்–பட்டி ஆகிய பகு–தி–களில் நடவு செய்து 4 நாட்–களே ஆன சுமார் 12 ஏக்–கர் நெற்–பயிர்–கள் நீரில் மூழ்–கி–யது. மேலும் மழை நீடித்–தால் சம்பா சாகு–படி செய்த அனைத்து விவ–சாய நிலங்–களும் நீரில் மூழ்கி நாச–மாகும் அபாய நிலை–யில் உள்–ளது. மேலும் வாழை சாகு–ப–டி– தோட்டங்களிலும் மழை–நீர் புகுந்து வடிய வழி–யில்–லா–மல் தேங்கியுள்ளது.

பரவலாக மழை: 44 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்- கலெக்டர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூல வைகையாறு, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மேலும் விவசாய பாசனத்திற்கு நீராதாரமாக உள்ள குளம், கண்மாய், பாசன வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன.

44 அடியை எட்டிய வைகை அணை

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து இன்று காலை 44.03 அடியை எட்டி உள்ளது. 407 கனஅடி நீர் வருகிற நிலையில் குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1305 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வைகை அணைக்கு வரும் நீர்வரத்து குறித்து மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள மழைமானியின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.

பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக உள்ளது. 301 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2033 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.99 அடியாக உள்ளது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

மழையளவு

வீரபாண்டி 0.6, பெரியகுளம் 2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 1.2, பெரியாறு அணை 2.4, தேக்கடி 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை விவரம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை நகரின் பல பகுதிகளில் கனமழையாகக் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த மழை வெளுத்து வாங்கியது. வழக்கமான மழையை விஞ்சி, மேகவெடிப்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேகவெடிப்பின் தாக்கம்

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அது மேகவெடிப்பு என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 சென்டி மீட்டரும், திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. அளவிலும் மழை கொட்டியது. இதனால் இப்பகுதிகளில் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியதுடன், தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் விவரம்

* பாரிமுனை: 36 செ.மீ.

* கத்திவாக்கம்: 34.4 செ.மீ.

* மீனம்பாக்கம்: 29 செ.மீ.

* சென்னை சென்ட்ரல்: 27 செ.மீ.

* சாத்தாங்காடு: 26 செ.மீ.

* திருவொற்றியூர்: 22 செ.மீ.

* எண்ணூர்: 21 செ.மீ.

* கார்கில் நகர்: 19 செ.மீ.

* சைதாப்பேட்டை: 17 செ.மீ.

* வடபழனி: 16 செ.மீ.

* நுங்கம்பாக்கம்: 15 செ.மீ.

சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவொற்றியூர் மற்றும் சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்கள் தீயணைப்புப் படையினரால் உடனடியாக அகற்றப்பட்டன. மேலும், தியாகராய நகர் உள்பட 4 இடங்களில் சாலையோர மின் இணைப்புப் பெட்டிகளில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகச் சிறிய தீ விபத்துகள் நிகழ்ந்தன. அவை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

சென்னையில் நள்ளிரவு வரை கொட்டித்தீர்த்த இந்த கனமழையால், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை முகாமில் இருந்து ஒரு சிறப்புக் குழுவினர் சென்னை வந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்பப் படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் குறித்து அமைச்சரும், மாநகராட்சி ஆணையரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை நீர் தேங்கினாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ பொதுமக்கள் '1913' என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

த.வெ.க.-வின் 3-வது மாநில மாநாடு: திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டம் எனத் தகவல்
த.வெ.க. 3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த த.வெ.க. திட்டமிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் உச்ச நடிகரான விஜய் கடந்த 2024-ம் ஆண்டு த.வெ.க. என்ற கட்சியை தொடங்கினார். அதே ஆண்டில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடிய அந்த மாநாடு இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி போனது.

தொடர்ந்து மதுரையில் 2-வது மாநாட்டை நடத்தினார். கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலையும் சந்தித்த விஜய், மகத்தான வெற்றியை அரசியல் அரங்கில் பதிவு செய்தார். த.வெ.க. ஆட்சியை பிடித்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.

3-வது மாநாடு

சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெற்று, மக்கள் தங்கள் பக்கம் என்பதை நிரூபித்துக் காட்டியது. இந்தநிலையில், கட்சியின் 3-வது மாநாட்டை, வெற்றி மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. த.வெ.க.வின் 3-வது ஆண்டு தொடக்கம், தேர்தல் வெற்றி, முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது மாநாடு நடக்க இருப்பதாகவும், இந்த மாநாட்டுக்கு வெற்றி மாநாடு என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கு: 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை
நாகையில் இருந்து இலங்கைக்கு ரூ. 270 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற வழக்கில் 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரகசிய தகவல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் இருந்து இலங்கைக்கு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வேளாங்கண்ணியில் விடுதி நடத்தி வரும் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த சுகநாதன் (வயது 27) என்பவர் வீட்டுக்கு, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 16 பேர் கொண்ட குழுவினர் சென்று சோதனை செய்தனர்.

ரூ.270 கோடி போதைப்பொருள் பறிமுதல்

இந்த சோதனையில் சுகநாதன் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக தலா 5 கிலோ அடங்கிய 27 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ. 270 கோடிக்கும் மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

த.வெ.க. பிரமுகர்

இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது வேளாங்கண்ணியை அடுத்த கீழையூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தாமணி ஊராட்சியைச் சேர்ந்த த.வெ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான பூபாலன் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஒரு குழுவினர் பூபாலன் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

4 பேர் கைது

அப்போது நடத்திய விசாரணையில் பூபாலன், சுகநாதன் உள்ளிட்டோர் இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்ததும், இதற்கு சுகநாதனின் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன் (29), நண்பர் சதீஷ் (30) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து த.வெ.க. பிரமுகர் பூபாலன், சுகநாதன், மணிகண்டன், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைதான 4 பேரிடமும் இரவு முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் 2-வது நாளாக அவர்களிடம் விசாரணை நீடித்தது. 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

2 பெண் போலீசாரிடம் விசாரணை

இதில் த.வெ.க. நிர்வாகி பூபாலன், விடுதி உரிமையாளர் சுகநாதன் ஆகியோருடன் செல்போனில் தொடர்பில் இருந்த 2 பெண் போலீசார் உள்பட 3 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதேபோல் கைதான பூபாலனிடம், போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் வெள்ள அபாயம் குறித்து பீதியடைய வேண்டாம் - அவசர உதவி எண் சேவை ஏற்பாடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா மற்றும் டி. லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் வடக்கு மற்றும் தெற்கு சென்னையில் மழைநீர் வடிகால் (SWD) பணிகள், கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

தவெக அமைச்சர்கள் ஆய்வு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள 200 அடி சாலையின் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படும் 16 சிறிய கால்வாய்கள் வழியாக, சதுப்பு நிலத்திலிருந்து வரும் மழைநீர் தடையின்றி செல்வதை அமைச்சர் ஆதவ் ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், வணிக வரித் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், ஓட்டேரியில் உள்ள ஏஏ சாலை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதையில் நடைபெற்று வரும் திடக்கழிவுத் துறைப் பணிகளை ஆய்வு செய்தார்.

வெள்ள தடுப்பு பணிகள் ஆய்வு

மேலும், வியாசர்பாடி சந்திப்பு மற்றும் முல்லை நகரில் உள்ள சேகரிப்புத் தொட்டிகளில் இருந்து மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வதற்காக, கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் தெற்குக் கால்வாயில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

கனமழையின் போது தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரண மையங்கள்

வெள்ள நிவாரண மையங்களும் சமையலறைகளும் தேவையான வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக மோட்டார் பம்புகள் நிறுவப்பட்டு வருவதாகவும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்தவும், மழைநீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் செயல்படும் அரசு உதவி எண் 1913-ஐ தொடர்பு கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

சென்னையை மிரட்டிய கனமழை - தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (ஞாயிறு) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை, தமிழ்நாட்டில் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அதிக இடங்களில் மழை பொழிகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.

தமிழ்நாடு வெதர்மேன்

மேகவெடிப்பின் காரணமாக சில பகுதிகளில் கனமழையும் கொட்டித்தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய 'எக்ஸ்' தள பக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

சுமார் 20 முதல் 30 சதுர மீட்டர் பரப்பளவுக்குள், ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்தால் அதை மேக வெடிப்பினால் ஏற்படும் மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

அந்த வகையில் நேற்று வடசென்னைக்கு உட்பட்ட கார்கில் நகரில் 10.9 செ.மீட்டரும், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மெப்பேடு பகுதியில் 10 செ.மீ. மழையும் கொட்டியது.

இதனால் இந்த பகுதிகளில் எல்லாம் மழைநீர் ஆறுபோல ஓடியது. சில தெருக்களில், தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது.

இதற்கிடையே இனி வரும் நாட்களிலும் பருவமழை தீவிரம் அடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

அதன்படி, வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் மற்றும் முதல் சுற்று மழை வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் நீடிக்கும் காற்று சுழற்சியால் நாளை (திங்கட்கிழமை) வரை பகலில் வெயில் அடித்தாலும் மாலை, இரவு, நள்ளிரவு நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பதிவாகும் என்றும்,

அந்த காற்று சுழற்சி 20-ந்தேதி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியில் மையம் கொண்டு, வலுவான காற்று சுழற்சியாகவோ, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவோ வலுபெற வாய்ப்பு இருக்கிறது என்றும்,

அதன் காரணமாக வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மழையை தீவிரப்படுத்தும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இதில் 21, 22-ந் தேதிகளில் வடகடலோரம் டெல்டாவில் கன முதல் மிக கனமழை வரை கொட்டக்கூடும் எனவும், இந்த நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கான சூழல் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

பின்னர் இந்த நிகழ்வு, 23-ந் தேதி தமிழ்நாட்டின் வழியாக நகர்ந்து கேரளாவையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் வருகிற 25-ந் தேதி வரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரம் அடைந்து காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

சென்னையில் நேற்றிரவு 7 மணி முதல் 10.30 மணி வரையிலான 3 மணி நேரத்தில் பாரிமுனையில் 26.83 செ.மீட்டரும், திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட கத்திவாக்கம் பகுதியில் 26.4 செ.மீட்டரும், சாத்தாங்காடு பகுதியில் 22.2 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

திருவொற்றியூர், கார்கில் நகர், எண்ணூர், தண்டையார்ப்பேட்டை போன்ற வடசென்னை பகுதியில் அதிக மழை பெய்துள்ளது.

சென்னையில் மேகவெடிப்பு?.. கொட்டித் தீர்க்கும் கனமழை - மக்களுக்கு எச்சரிக்கை
சென்னையில் மேகவடிப்பு ஏற்பட்டதுபோல மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.

மேகவெடிப்பு?

சென்னையில் குறிப்பாக கத்திவாக்கம், பாரிமுனை மற்றும் திருவொற்றியூர் பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் கடந்த 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

அதிகபட்சமாக 3 மணி நேரத்தில் கத்திவாக்கத்தில் 26 செ.மீ., பாரிமுனை 25.5 செமீ, திருவெற்றியூர் 15 செ.மீ, தண்டையார்பேட்டை 10 செ.மீ, எண்ணூர் 9 செ.மீ, மணலி 9 செ.மீ, மாதாவரம் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தற்போது மேகங்கள் தென்சென்னையை நோக்கியும் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

எச்சரிக்கை

இன்று இரவு முழுவதும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மேலும் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், அரபிக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 17 அக்டோபர் 2026
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party- மு.க.ஸ்டாலின்

* சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?

* ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.

GOLD PRICE TODAY : வார இறுதிநாளில் சற்று உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

* வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை.

*  ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

தேனி மாவட்டத்தில் பருவமழை தீவிரம்: பெரியாறு, வைகை அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

* மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 27.40 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

* மழை, பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

* வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

* சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

கிரீஸ் நாட்டில் திருமண ஏற்பாடு.. காவ்யா மாறனை கரம் பிடிக்கிறார் அனிருத்

*  நவம்பர் 11-ந்தேதி அனிருத்-காவ்யா மாறன் திருமணம் நடைபெறுகிறது.

* திருமணத்திற்காக  4 தனி விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உலக மல்யுத்தம்: இந்திய வீராங்கனை அம்ருதா இறுதிப்போட்டிக்கு தகுதி

* பெண்களுக்கான பிரீஸ்டைல் 72 கிலோ எடைப்பிரிவில் அம்ருதா பூஜாரி கால் இறுதியில் வென்றார்.

* இந்திய வீராங்கனை கோமல் 7-2 என்ற புள்ளி கணக்கில் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

ஜாபர் சாதிக் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பரவியது- அமைச்சர் நிர்மல் குமார்

*  திமுக ஆட்சியே தமிழகத்தில் போதைப்பொருள் பரவக் காரணம்.

* அதிமுக சொத்துக்களை திமுகவிடம் அடகுவைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார்.

‘ஏசி’ காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தமிழகத்தில் 25 நவீன பத்திரப்பதிவு மையங்கள்

* மையங்களை வடிவமைத்து பராமரிக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தக் காலம் 5 ஆண்டுகள்.

* வரவேற்பைப் பொருத்து அடுத்தக்கட்டமாக மேலும் 20 மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்- திரையுலகினர் அதிர்ச்சி

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியுள்ளார்.

* 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவா மறைவு-  ஆளுநர், குஷ்பு உள்ளிட்டோர் இரங்கல்

* தேவாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* 'தேனிசைத் தென்றல்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், தேனைப் போன்ற இனிமையான குணமும், காற்றைப் போன்ற கலகலப்பான இயல்பும் கொண்டவர்.

தேவா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு- முதலமைச்சர் விஜய்

*  400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார்.

* பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

லண்டனில் இந்திய மாணவர்கள் போராட்டம்: அரசு ஆதரவாளர்கள் எதிர்-போராட்டத்தால் பரபரப்பு!

* லண்டன் இந்திய தூதரகம் முன் மாணவர்கள் ஒற்றுமை போராட்டம் - வெளிப்படைத்தன்மை கோரிக்கை.

* மோடி ஆதரவாளர்கள் எதிர் போராட்டம் - போலீஸ் குவிப்பால் பரபரப்பு.

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா - மு.க.ஸ்டாலின்

* வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

* ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார்.

காற்றில் கரைந்த தேனிசைத் தென்றல்..!- இசையமைப்பாளர் தேவாவின் வாழ்க்கைக் குறிப்பு

* ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1995-ல் 36 படங்களுக்கு இசையமைத்தார்.

* தமிழில் மட்டும் 340க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு- அரசியல் தலைவர்கள் இரங்கல்

* தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு.

* தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.

கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்றுநான் கவலைப்படாமல் என்ன செய்ய?- வைரமுத்து உருக்கம்

* தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல்.

* இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு- மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

* திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து தேவா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

* தேவாவின் உடலுக்கு நாளை மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

தேவா உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி

*  ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

* நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்தார்.

சீனாவில் நடந்த திருமணம் - மணமகன் பெயரும் 'ஜூ சியாசோங்'.. மணமகள் பெயரும் 'ஜூ சியாசோங்'!

* ஜெஜியாங்கில் ஒரே பெயருடைய ஜூ சியாசோங் ஜோடி திருமணம் - வயதில் மற்றும் மாற்றம் நெட்டிசன்கள் வியப்பு!

* ஒரே துறையில் வேலை, போஸ்டரை பார்த்து அச்சுப்பிழை என்று குழம்பிய உறவினர்கள்!

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு- தமிழ்நாடு அரசு

* தேவாவின் மறைவு செய்தி அறிந்து திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

*  தேவாவின் உடலுக்கு நாளை மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகிறது.

போதை கலாசாரத்தை ஒழிப்பேன் என வீரவசனம் பேசியவர்கள் அதை ஒளித்து வைத்து தமிழ்நாட்டை சீரழித்து கொண்டிருக்கிறார்கள் - கனிமொழி.

*தவெக நிர்வாகியே இவ்வளவு பெரிய அளவில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்துள்ளார் என்றால், இவ்வளவு துணிச்சலைத் தந்தவர்கள் யார.

*பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!- மு.க.ஸ்டாலின்

* ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!

* SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!

ஆற்காட்டில் இசையமைப்பாளார் தேவாவின் இறுதி சடங்கு.

*ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் தேவாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

*'தேனிசைத் தென்றல்' தேவாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அனைவரும் ஒன்று சேர வேண்டும், அதிமுக-வை வலிமைப்படுத்த வேண்டும்: சி.வி. சண்முகம்

* தொண்டர்கள் களத்தில் நம்பிக்கையோடு பணியாற்றினால்தான் மக்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும்.

* அந்த எண்ணத்தையும், நம்பிக்கையும் உருவாக்க வேண்டும் என்றால் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி.

*தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய் ஸ்ரீகாந் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

*தேவாவின் உடல் நாளை ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் தேவாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

25 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

* புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தேவா மறைவு - சீமான், பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்.

*திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.

*தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!...

*தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர்-ஐ அறிவித்தவுடன், "சதி வலையைத் தமிழ்நாட்டிலும் விரிக்கப் பார்க்கிறது பாஜக.

தேனிசைத் தென்றல் தேவா மறைவு - சிபிஎம் இரங்கல்.

*தேவா 40 ஆண்டுகளில் 450 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

*மறைந்த தேவா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.

அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்...

*பிரபல நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகத் தெரிவித்தார்.

*எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குச் சேவையாற்ற யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து இணைத்துக் கொள்ளும் பரந்த பக்குவம் கொண்டவர்.

அக்.24 வரை ஜெட்டா, ரியாத்துக்கான விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஏர் இந்தியா.

*அப்பகுதியில் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

*விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட பயணிகள், பயணம் செய்ய விரும்பவில்லை எனில், கட்டணத்தைத் முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை: வெளியூர் செல்லும் பயணிகள் அவதி.

*தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் தேவா மறைவு - துணை குடியரசுத் தலைவர் இரங்கல்.

*காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும்.

*தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா.

19-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம், இந்த மாதம் இறுதிக்குள் இரண்டு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. ஒன்று அரபிக் கடலிலும், மற்றொன்று வங்கக்கடலிலும் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

19-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் இன்று தென்மேற்கு அரபிக் கடலில் நாளை மறுதினம் (அக்டோபர் 19-ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக 19-ந்தேதி அரபிக் கடல் தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

இதற்காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், அதையொட்டிள்ள பகுதிகளில் பரவாலாக பருமமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் தேவா மறைவு - துணை குடியரசுத் தலைவர் இரங்கல்
பிரபல தமிழ் திரைப்படை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் தேனிசைத் தென்றல் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் இன்று உயிரிழந்தார்.இவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மறைந்த தேனிசைத் தென்றல் தேவாவிற்கு குடியரசுத்துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

இசையமைப்பாளர் தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் தேவா அவர்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.

படைப்பு என்றுமே நினைவுகூரப்படும்

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று  தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் திரு. தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

எளிய மக்களின் உணர்வுகளையும் வாழ்வியலையும் தனது இசையிலும் கானா பாடல்களிலும் அழகாக வெளிப்படுத்தி, தனித்துவமான இசைப்பாணியால் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் திரு. தேவா அவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர்.

காலத்தால் அழியாத பல பாடல்களைத் தந்த அவரது இசைப் பங்களிப்பும், தனித்துவமான கானா பாடல்களும் என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு தமிழ் இசையுலகிற்குப் பேரிழப்பாகும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Vice-President of India (@VPIndia) October 17, 2026

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை: வெளியூர் செல்லும் பயணிகள் அவதி
தமிழ்நாட்டில் அக்டோபர் 15-16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதன் எதிரொலியால் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழையானது பெய்து வருகிறது.

இடி மின்னலுடன் கனமழை

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான எழும்பூர், சென்ட்ரல் , சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையானது பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல மழை பதிவாகியுள்ளது.

பயணிகள் அவதி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து  வருகிறது. இதனால் வெளியூர்களுக்குப் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல  மக்கள்  கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம்,எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பரவலாக பெய்து வரும் மழை பயணித்தில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படிசெங்கல்பட்டு, நெல்லை, குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல்கோவை, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரபரப்பு: அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் இடையே வாக்குவாதம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் வருகிற நவம்பர் 15-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயிலில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் தீவிர ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது செய்தியாளர்களை பின்தொடர வேண்டாம் என்றும், கோயிலுக்குள் பத்திரிகையாளர்களை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

ஆய்வுப் பணிகளுக்காக அமைச்சர்கள் மட்டும் செல்வதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்களுடன் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதாகப் பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அமைச்சர்களுடன் வந்திருந்த உதவியாளர் ஒருவர் இஸ்லாமிய மத அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான தொப்பியை அணிந்தபடி கோயிலுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த கோயில் நிர்வாகிகளும் சில தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கோயிலுக்குள் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் வழிபாடு செய்ய வரலாம்; ஆனால், மாற்று மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளோ அல்லது தொப்பிகளோ அணிந்து கொண்டு கொடிமரத்தைத் தாண்டி செல்வது முறையல்ல என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்தச் சம்பவத்தால் கோயில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

முதலமைச்சர் விஜயை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
முதலமைச்சர் விஜயை விட "யோகி பாபு வருகிறார் என்று சொன்னால் கூட அவ்வளவு கூட்டம் வரும்; விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அதிகமாகவே கூட்டம் கூடும்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகத் திறமை குறித்துக் கடுமையாகச் சாடினார்.

மெத்தப்பட்டமைன் போன்ற கொடிய போதைப் பொருள் விவகாரத்தில் தவெகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், தவெக அரசு தனது கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் அதனை மறைக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், மத்திய புலனாய்வுத் துறை விசாரணையில்தான் தற்போது உண்மைகள் வெளியே வந்து கொண்டிருப்பதாகவும், இது வெறும் ஒரு மாதிரி மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார். மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகத் தவெக அரசின் நிர்வாகத் திறன் பூஜ்யமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

செல்லூர் ராஜூ கிண்டல்

தவெகவினர் அதிமுகவை விமர்சிப்பது குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டர்களை அழைக்கும் தகுதி தவெகவிற்கு இல்லை என்று கூறினார். அரசியலில் மார்க்கெட் இல்லாத காரணத்தினால்தான், பலத்தோடு இருக்கும் அதிமுகவின் பெயரைப் பயன்படுத்தி தங்களை வளர்த்துக் கொள்ள தவெகவினர் முயல்வதாகத் தெரிவித்தார். அப்போது கூட்டத்தைக் கூட்டுவது குறித்துக் குறிப்பிடுகையில், "யோகி பாபு வருகிறார் என்று சொன்னால் கூட அவ்வளவு கூட்டம் வரும்; விஜய்க்கு கூடும் கூட்டத்தை விட அதிகமாகவே கூட்டம் கூடும்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

அதிமுக ஒரு ஆலமரம்

அதிமுகவிலிருந்து சில நபர்கள் வேறு கட்சிகளுக்குச் செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுக என்பது பலத்த வேர்களைக் கொண்ட ஒரு ஆலமரம் போன்றது. அந்த மரத்திலிருந்து உதிரும் சில இலைகளைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை" என்றார். உண்மையான தொண்டர்கள் அனைவரும் எப்போதும் அதிமுகவுடன் தான் இருக்கிறார்கள் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் செல்லூர் ராஜூ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போதை பொருளை தடுக்க அமைத்த 65 படைகள் எங்கே? ஆ.ராசா கேள்வி
திமுக எம்.பி. ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

கேள்வி: த.வெ.க. நிர்வாகி ஒருவரின் வீட்டில் சுமார் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே திமுக ஆட்சியில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய போராட்டங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த கட்சி, இன்று தன்னுடைய நிர்வாகி வீட்டிலேயே இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் சிக்கியிருப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருக்கிறதே?

பதில்: முதலமைச்சர் பதவியேற்ற மேடையிலேயே ஒரு கையை காட்டினார். எல்லோருக்கும் தெரியும்.

திமுக ஆட்சியில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்தவில்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூச்சலிட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பி மக்கள் வாக்களித்திருக்கலாம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கலாம். பரவாயில்லை.

ஆனால், இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. போதைப்பொருள் தடுப்புப் பணிக்காக 65 குழுக்கள் செயல்படுகின்றன. ஏற்கனவே இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு போதுமான குழுக்கள் இல்லை என்று கூறியவர்கள், இப்போது இவ்வளவு குழுக்களை அமைத்திருக்கிறார்கள்.

தற்போது டிஜிபி-யாக இருப்பவரின் பணிகளை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அவருடைய தலைமையில் நடைபெற்ற நடவடிக்கைகள் குறித்து எங்களுடைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அந்த நடவடிக்கைகளை எல்லாம் கொச்சைப்படுத்தி, இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியதற்குப் பிறகுதான் அவரை டிஜிபி-யாக நியமித்தார்கள். அதிலேயே ஒரு புரியாத புதிர் இருக்கிறது.

65 குழுக்கள்

ஆனால், இப்போது விஜய் முதலமைச்சரான பிறகு 65 குழுக்களை அமைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இந்த 65 குழுக்களும் கடந்த நான்கு மாதங்களாகத் தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

உங்களிடம் உளவுத்துறை இருக்கிறது. 65 குழுக்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி, டெல்லியிலிருந்து மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் (DRI) வந்து இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் மதிப்பு, டெல்லியில் பேசினால் சுமார் 800 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இவ்வளவு பெரிய அளவில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகவும் தீவிரமான விஷயம்.

இதுவரை சிறிய அளவில் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாகச் செய்திகள் வந்திருக்கின்றன. சில இடங்களிலிருந்து சிறிய அளவிலான போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது? தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

135 கிலோ போதைப்பொருள் இங்கிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது.

நான் மீண்டும் கேட்கிறேன். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. இங்கு 65 குழுக்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?

கேட்டால், திமுக ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என்று சொல்வார்கள். அப்படியானால், இப்போது என்ன நடந்திருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்.

செய்தியாளர்: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?

பதில்: அவர் வெறும் கட்சிப் பிரமுகர் மட்டுமல்ல. தொகுதிப் பொறுப்பாளர்.

திமுக-வில் யாராவது தவறு செய்துவிட்டு, ராஜாவுடனோ, உதயநிதியுடனோ, பரந்தாமனுடனோ புகைப்படம் எடுத்திருந்தால், அவர்களைத் திமுக-வினர் என்று சொல்வீர்கள். ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்பில் இருந்தவர். மயிலாடுதுறை மாவட்டம், கீழையூர் ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.

கட்சியின் அதிகாரப் பொறுப்புகளில் இருப்பவர்கள்

இதற்கு முன்னதாகவும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தொடர்பாகப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட செய்திகள் வந்திருக்கின்றன. ஈரோட்டைச் சேர்ந்த அருணன் என்பவரிடம் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வேதாரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் தொடர்பாக 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பூபதி ராஜா என்ற நிர்வாகி தொடர்பாக ஜூன் 26-ம் தேதி வாகனச் சோதனையில் 12 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இவர்கள் எல்லோருமே கட்சியின் அதிகாரப்பூர்வப் பொறுப்புகளில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால், எங்களுடன் யாராவது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டால், அதை வைத்துக்கொண்டு எவ்வளவு அரசியல் செய்வீர்கள்.

ஒரு அரசியல் கட்சித் தலைவர், அரசியல் பிரமுகர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் யாராவது எங்களுடன் வந்து நிற்கும்போது, அவர்களை பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் முன்கூட்டியே விசாரித்து, அவர்களுடைய தொடர்புகள் அனைத்தையும் சரிபார்த்துவிட்டுத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்று சொல்ல முடியுமா?

அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை வைத்து எவ்வளவு பிரச்சாரம் செய்தீர்கள்.

ஆனால், இப்போது உங்கள் கட்சியின் நிர்வாகி, தேர்தல் பொறுப்பாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்டோர் தொடர்பாக இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

1000 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது

இதன் மதிப்பு சுமார் 1,000 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டில் வைக்கப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அப்படியானால், இன்னும் எவ்வளவு போதைப்பொருள் இருக்கிறது? இன்னும் எத்தனை இடங்களில் இருக்கிறது? இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் இதேபோன்ற பொருள் இவ்வளவு பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதா?

இந்த மெத்தம்பெட்டமைன் விவகாரம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் நிர்வாகத்துக்கும், பாதுகாப்புக்கும் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினை.

தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் இந்த வகையான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வரலாறு இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.

65 குழுக்களை அமைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? எங்கே கொண்டு செல்லப்பட்டது? இதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது, உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும்.

போராட்டம் நடத்தப்படுமா?

செய்தியாளர்: இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதே. இதுகுறித்து திமுக பெரிய அளவில் போராட்டம் நடத்துமா? தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்துவீர்களா?

பதில்: அதைப் பற்றி எங்கள் தலைவர் முடிவு செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிர்வாகியிடம் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் சிக்கியிருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, யாரும் எங்களை கைது செய்யமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.

இது ஒரு போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை நீங்கள் முன்வைக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னேன். இப்போது இது ஒரு மையமாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கு முன்னர் ஒருவரை கைது செய்தபோது, டெல்லிக்கு சென்று கைது செய்ததை வைத்துக்கொண்டு எவ்வளவு விமர்சனங்களை முன்வைத்தீர்கள்? இப்போது நேரடியாகப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பொறுப்பு இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது

கேள்வி: தமிழ்நாட்டில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய அளவில் இந்தப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.

பதில்: இப்போது ஆட்சி மாறியிருக்கிறது. போதைப்பொருளைத் தடுக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது.

Stop Run, Start Drug என்று சொல்வது, போதைப்பொருளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இப்போது இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும்போது, இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? எங்கே கொண்டு செல்லப்பட இருந்தது? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டும்.

பெரிய வலையமைப்பு இருக்கிறதா?

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடைபெற்றிருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் ஒரு பெரிய வலையமைப்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

செய்தியாளர்: பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மூலம் கிடைத்திருக்கக்கூடிய பணம் அரசியல் கட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமா?

பதில்: இந்தப் பணத்தை எப்படி முறையாக அரசாங்கத்தின் திட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும்? இவ்வளவு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பணம் எங்கே செல்கிறது? யார் அதைப் பயன்படுத்துகிறார்கள்? இதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.

இந்தப் பணத்தை அரசாங்கத்தின் கருவூலத்துக்குக் கொண்டு வந்து, நாங்கள் இதைப் பயன்படுத்தி பாலம் கட்டப்போகிறோம் என்று சொல்ல முடியுமா?

எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தது

செய்தியாளர்: கட்சிக்காக இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அமைச்சர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?

பதில்: நான் கேட்கும் கேள்வி அதுவல்ல.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் எப்போது தமிழ்நாட்டுக்குள் வந்தது? எத்தனை இடங்களில் இதுபோன்ற போதைப்பொருள் இருக்கிறது? இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதுதான் இது பிடிபட்டிருக்கிறது.

நீங்கள் நியமித்த டிஜிபி இருக்கிறார். 65 குழுக்கள் இருக்கின்றன. போதைப்பொருள் தடுப்புப் படைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

இந்தப் போதைப்பொருளை அவர்கள் பறிமுதல் செய்யவில்லை. வேறு ஒரு அமைப்புதான் அதைப் பறிமுதல் செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுதான் கடைசியாகப் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் என்று அவர்கள் சொல்லவில்லை. எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, இன்னும் அதிகமான போதைப்பொருள் இருக்கக்கூடும். எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவரலாம்.

இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் திமுக ஆட்சியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக இருப்பதாகச் சட்டமன்றத்தில் பல்வேறு புள்ளி விவரங்களைப் பேசியிருக்கிறார்கள்.

இப்போது இந்தச் சம்பவம் குறித்து அவர்களிடம் போய்க் கேளுங்கள். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று கேளுங்கள்.

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையது

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயங்கரவாதச் செயல்களுடனும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மூளைச் சலவை செய்வதற்கும், சர்வதேச ஆயுதக் கடத்தலுக்கும், எல்லை தாண்டிய பயங்கரவாதச் செயல்களுக்கும் இதுபோன்ற வலையமைப்புகள் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதில் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது; நிதி தொடர்பான அச்சுறுத்தலும் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் போதைப்பொருள் பயன்பாடு என்ற பிரச்சினை வருகிறது.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், மத்திய அரசு அதைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து அரசாங்கம் பெரிய அளவில் பதற்றமடைந்ததாகவோ, உரிய நடவடிக்கைகளை உடனடியாக அறிவித்ததாகவோ தெரியவில்லை. மிகவும் சாதாரணமாகப் பேசுகிறார்கள்.

இவ்வளவு தீவிரமான பிரச்சினையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

செய்தியாளர்: இதில் எந்த மர்மமும் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா?

பதில்: இதில் மர்மம் எதுவும் இல்லை என்று சொல்வதைவிட, நீங்கள் கணக்கிட்டுப் பார்த்தாலே பல கேள்விகள் எழுகின்றன. அதற்கான பதில்களை அரசாங்கம் அளிக்க வேண்டும்.

உங்களுடைய போதைப்பொருள் தடுப்புப் படைகள் எங்கே போயின? போதைப்பொருளுக்கு எதிராகப் பிரசாரம் செய்தீர்கள். மாணவர்கள் மத்தியில் நின்று சத்தியம் செய்தீர்கள். அந்தச் சத்தியம் என்ன ஆனது?

எல்லாமே ரீல்ஸாகத்தான் இருக்கிறதா? நீங்கள் செய்த பிரசாரங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் காணொளிகளுக்காக மட்டும்தானா?

Start Run, Stop Drug என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், இப்போது என்ன நடந்திருக்கிறது?

இந்த அரசாங்கம் இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வெறும் ரீல்ஸ்களில் தங்களை நல்லவர்களாகச் சித்தரித்துக்கொண்டு செயல்படுவதால் மட்டும் போதாது. உண்மையில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள்.

இன்றைக்கு நடந்துகொண்டிருப்பதை மக்கள் அறிவார்கள். இந்தச் செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

அதிமுகவில் இணைகிறாரா நடிகர் தனுஷ்?- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
பிரபல நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாகத் தெரிவித்தார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், முக்கியப் பிரமுகருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், 'தமிழக எழுச்சிக் கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், சமீபத்தில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்றக் கூட்டத்தில், ரசிகர் மன்றங்கள் இனி நற்பணி இயக்கமாகச் செயல்படும் என்றும், அதற்கான புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குச் சேவையாற்ற யார் வந்தாலும் அவர்களை அரவணைத்து இணைத்துக் கொள்ளும் பரந்த பக்குவம் கொண்டவர். இயக்கத்தின் வளர்ச்சிக்குத் பங்களிப்பவர்களாக இருப்பாரேயானால், அவர்களைத் தடுத்து நிறுத்தாமல் எடப்பாடி பழனிசாமி இணைத்துக் கொள்வார். இளைஞர்கள் மத்தியில் நடிகர் தனுஷ் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அப்படிப்பட்ட பிரபல நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால், அவரை நாங்கள் இருகரம் கூப்பி வரவேற்போம்" என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.

அரசியலும் நடிப்பும் வெவ்வேறானது

இதனைத் தொடர்ந்து நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்துத் தனது தனிப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், நடிகர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். ஆனால், அரசியலுக்கு முழுமையாக வந்த பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பது சரியாக இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்காலத்தில் சில நடிகர்கள் ஒரே நேரத்தில் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டு வருவதாகக் விமர்சித்தார். மேலும், நடிகர் தனுஷ் அதிமுகவில் இணையப் போவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும், அதற்கான காலம்தான் பதில் சொல்லும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

தேனிசைத் தென்றல் தேவா மறைவு - சிபிஎம் இரங்கல்
இசையமைப்பாளர் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். கானா இசையைத் தமிழ் திரைவுலகின் முக்கிய இடத்திற்கு கொண்டுவந்தவர்.இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருந்தார்.இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய இயலா இழப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர் பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

புகழ்பெற்ற இசையமைப்பாளரான "தேனிசைத் தென்றல்" தேவா அவர்களின் மறைவு தென்னிந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். 40 ஆண்டுகளில் 450 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு திரைப்படங்களுக்கும் இவரது இசைப் பங்களிப்பு இருந்திருக்கிறது.

சிறந்த கலை ஆளுமையை தமிழ்நாடு இழந்துள்ளது

எளிய மக்களின் வாழ்க்கையை, பாடுகளை உள்ளடக்கிய கானா வடிவம் இவரால் திரைப்படங்களில் அறிமுகம் ஆகி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.1986 2026 வரையிலான இவரின் இசைப் பயணம் கலையுலக வரலாற்றில் அழியாப் பதிவுகளாக நிலைத்து நிற்கும். கலை மாமணி விருது பெற்றவர். "பாட்ஷா" "அருணாச்சலம்" "ஆசை" "வாலி" உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்கள் இவரின் இசையில் உருவானவை.

அவரே பாடல்களை எழுதி பாடியவர். இசையின் பல்வேறு பரிமாணங்களிலும் தனது அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்திய கலை ஆளுமையை தமிழ்நாடு இழந்திருக்கிறது.மறைந்த தேவா அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும். ரசிகர்களுக்கும் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.

என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்!
"தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்துகளும் வெளிப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெளிவுபடுத்தினார்.

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரு தொகுதிகளிலும் கட்சி வெற்றி பெற்றது. இதன் காரணமாகத் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர்,"தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ கருத்துகளும் வெளிப்படுத்தப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார். இதன் மூலம் அமைச்சரவை மாற்றம் குறித்த பரவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவில் இருந்து முக்கியப் பிரமுகர்கள் சிலர் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "அதிமுகவில் இருந்து 15 பேர் வருவார்கள் என்றுதான் நான் சொன்னேனே தவிர, 15 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று நான் கூறவில்லை. அரசியலில் இதற்கு முன்னரும் ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்குத் தலைவர்களும் தொண்டர்களும் மாறி வந்துள்ளனர். எனவே, இது எந்தவிதமான குதிரை பேரத்திற்கும் வழிவகுக்காது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அரிசி தட்டுப்பாடு

பொதுமக்களுக்குத் தடையின்றி நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரிசி உற்பத்தி குறைவாக இருக்கும் காலகட்டங்களில் இதுபோன்று தற்காலிகத் தட்டுப்பாடுகள் ஏற்படுவது வழக்கம் என்றார். இதனைச் சமாளிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக 2,000-க்கும் மேற்பட்ட அங்காடிகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சந்தையில் விலைவாசி கணிசமாகக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தட்டுப்பாட்டைப் போக்க அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதல் அரிசியைக் கொள்முதல் செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கடந்த மூன்று மாத காலமாக இதற்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மழைநீர் வடிகால் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு உதவ 5 இடங்களில் போலீஸ் உதவி மையங்கள்
பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக மாதவரம் பஸ் நிறுத்தம் அருகிலும் கோயம்பேடு தேர்தல் ஆணையம் முன்பும் போரூர் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

வெளியூர் செல்லும் பொதுமக்களின் உதவிக்காக மாதவரம் பஸ் நிலையம், கோயம்பேடு தேர்தல் ஆணையம் அலுவலகம் முன்பு, கோயம்பேடு பஸ் நிலைய நுழைவு வாயில், கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தம், போரூர் சுங்கசாவடி ஆகிய 5 இடங்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

போலீசார்

அங்கு போலீசார் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு போலீஸ் துணை கமிஷனர், 4 உதவி ஆணையர்கள், 9 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள், 39 சப்-இன்ஸ்பெக்டர்கள், 86 காவலர்கள் மற்றும் ஆயுதப் படை போலீசார், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ உதவி

பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக மாதவரம் பஸ் நிறுத்தம் அருகிலும் கோயம்பேடு தேர்தல் ஆணையம் முன்பும் போரூர் சுங்கச்சாவடியில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பூந்தமல்லியில் இருந்து வரும் வணிக மற்றும் கனரக வாகனங்கள் சென்னைக்குள் அனுமதிக்கப்படாமல் ஆலப்பாக்கம் சந்திப்பில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது.

கோயம்பேடு

மாதவரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி வரும் கனரக வாகனங்கள் சென்னை எல்லை மற்றும் மதுரவாயல் நோக்கி அனுமதிக்கப்படாது. அவை செங்குன்றம் வழியாக 200 அடி புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்புக்காக 10 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 20 இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அதிக வாகனங்கள் வரும் என்பதை கருத்தில் கொண்டு அங்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு- திருமாவளவன்
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு தமிழ் சமூகத்திற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும் என திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., திருச்சி விமான நிலையத்தில் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவா மறைவுக்கு இரங்கல்

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவு மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் அவர். 75 வயதிலும் புகழுடன் திகழ்ந்தவர். தமிழ் மக்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.  தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கான புகழ்பெற்ற அறிமுகப் பாடலையும் உருவாக்கியவர் தேவா. இன்றளவும் அந்தப் பாடல் ரஜினிகாந்தின் அடையாளங்களில் ஒன்றாக  திகழ்கிறது. அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

தேவாவை இழந்து வாடும் அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவது உள்நோக்கம் கொண்டதாக இருக்கும். உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்குப் பின்னணியில் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம்,  திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட உள்ளதாகவும், அவரை எதிர்த்து  தமிழக வெற்றிக்கழக கூட்டணி  சார்பில் நீங்கள் களம் இறங்குவதாகவும் செய்திகள் பரவுகிறதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு திருமாவளவன் ஆத்திரத்துடன் பதிலளித்தார். அவர் கூறுகையில்,  “நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை” என தெரிவித்தார்.

பைனான்சியர் வீட்டில் 15 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு- வாலிபர் கைது
தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம், பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது வீட்டின் கீழே தரைதளத்தில் பைனான்ஸ் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். மேல்தளத்தில் உள்ள வீட்டை புனரமைப்பு செய்து வருவதால் வேல்முருகன் கடந்த சில மாதங்களாக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் மாறினார்.

கொள்ளை

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 3-ந் தேதி அவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து படுக்கையறை லாக்கரில் வைத்திருந்த 15 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை சுருட்டிக் கொண்டு தப்பிவிட்டனர்.

போலீசார்

தகவல் அறிந்து வந்த அசோக் நகர் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 23) என்பவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்து வேல்முருகன் வீட்டில் கைவரிசை காட்டியது தெரிந்தது. தொடர்ந்து அஸ்வினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சையில் இன்று பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று பூக்களின் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது.

தஞ்சாவூர் பூக்காரத் தெரு மற்றும் தொல்காப்பியர் சதுக்கத்தில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் லாரிகளில் டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதே போல் இங்கிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர ஏராளமான பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

பண்டிகை

பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் என்பதால் அந்த சமயங்களில் அதன் விலையும் கணிசமாக அதிகரிக்கும். மேலும் வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.

இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜைகள் நடைபெறும். இதற்கு பூக்களும் தேவை வழக்கத்தை விட அதிகம் தேவைப்படுகிறது.

தஞ்சை

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பூக்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று பூக்களின் விலை கிடுகிடுவன உயர்ந்துள்ளது. அதன்படி கனகாம்பரம் பூ பல மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை கிலோ ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகின.

இதேபோல் முல்லை ரூ.1100, செவ்வந்தி ரூ.300, ஆப்பிள் ரோஸ் ரூ.300, சம்பங்கி ரூ.300, செண்டி ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.200, அரளி ரூ.500, கோழி கொண்டை ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூ வியாபாரி

இது குறித்து பூ வியாபாரி குமரேசன் கூறும்போது, பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். அதன்படி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. நாளை இதை விட விலை அதிகமாக இருக்கும் என்றார்.

தேவா மறைவு - சீமான், பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்
தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம் அடித்தட்டு மக்களின் இதயங்களை வென்ற தனித்துவமிக்க இசையமைப்பாளர், 'தேனிசைத் தென்றல்' தேவா  இன்று  சென்னையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இவரின் இழப்புக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

சீமான்

தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின்  இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும்,  மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும்.

இசைகாற்று ஒலித்துக் கொண்டிருக்கும்

என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்‘தேனிசைத்  தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

என்று பதிவிட்டுள்ளார்

பிரேமலதா விஜயகாந்த்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவு – ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.இசையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்ற மாபெரும் இசைக்கலைஞர், தேனிசைத் தென்றல் திரு. தேவா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

அவரின் இசை நம்முடனே இருக்கும்

தமிழ்த் திரையுலகின் இசை வரலாற்றில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றவர் தேவா அவர்கள். தனது இனிமையான மெட்டுக்களாலும், மண்ணின் மணம் மாறாத நாட்டுப்புற இசையாலும், காலத்தால் அழியாத பாடல்களாலும் தலைமுறைகள் கடந்து மக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த மகத்தான இசை மேதை.

எனது அன்புக் கணவர், புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கும் இடையே நிலவிய நட்பும் அன்பும் மிகவும் ஆழமானவை. திரையுலகில் இருவரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்களின் பாடல்கள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

கேப்டன் அவர்களுடன் இணைந்து பல மறக்க முடியாத இசை நினைவுகளை உருவாக்கிய தேவா அவர்கள், இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும், அவருடைய இசை என்றென்றும் நம்முடன் வாழும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், உலகெங்கும் உள்ள அவரது இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு- தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்
பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமியை 6 நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் மர்மம் நீடிப்பதால் ஆலம்பூண்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. கூலித்தொழிலாளி.

7 வயது சிறுமி

இவரது மனைவி பவானி. இவர்களது 2-வது மகள் ஹேமாவதி(வயது7). இவர் அந்த ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 11-ந்தேதி சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினர். பிறந்தநாள் கொண்டாடத்தை முடித்து விட்டு அனைவரும் தூங்க சென்றனர். சிறுமியும் பெற்றோருடன் தூங்கினார்.

மாயம்

இந்த நிலையில் மறுநாள் அதிகாலை 5 மணியளவில் வீட்டில்,  தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மாயமான சிறுமியை கண்டுபிடிக்க 3 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடு, வீடாக சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனையும் மேற்கொண்டனர்.

அத்துடன் ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், குளம், ஏரி, குட்டைகள், பாறை இடுக்குகள், மலைக்குன்றுகள் உள்ளிட்டவற்றிலும் போலீசார், தீயணைப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  மேலும் மரக்காணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மீன்பிடி சுருக்கு மடிவலைகள் மூலம் தேடுதல் என பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுதவிர 3 செல்போன் டவர்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி மாயமாகி 6 நாட்களாகியும் இதுவரை எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீசார் திணறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, சிறுமியின் வீட்டருகே உள்ள சிவன் கோவிலில் தங்கியிருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜோதிடம் பார்க்கும் சாமியாரான சரவணன் என்பவர், சிறுமி மாயமான நாளில் இருந்து திடீரென காணாமல் போயிருந்தார்.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் விழுப்புரம் அடுத்த அரசூர் பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார், அங்கு சென்று சரவணணை பிடித்தனர்.

பின்னர் சரவணனை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விடிய, விடிய விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரிடம் நடத்திய  விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாகவும், சிறுமி கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என மறுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அதேபோன்று சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று சிறுமியின் தாயிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 6-வது நாளாக தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  போலீசார், தீயணைப்புத்துறையினர் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே மாயமான சிறுமியை 6 நாட்களாக கண்டுபிடிக்க முடியாமல் மர்மம் நீடிப்பதால் ஆலம்பூண்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

மர்ம விலங்கு கடித்து 2 ஆடுகள் பலி- சிறுத்தை நடமாட்டமா?
கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் காவேரிப்பட்டி ஊராட்சி பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (30), விவசாயம் செய்து வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.

மர்ம விலங்கு

இவர் நேற்று மாலை வழக்கம்போல் ஆடு. மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று பின்னர் கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்தபோது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.

கால்நடை

அந்த மனுவில் கால்நடைகளை வளர்த்து வாழ்வாதாரம் நடத்தி வரும் தனக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆடுகள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், காவேரிப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஆடு, கோழிகளை தாக்கிக்கொன்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது சிறுத்தையின் நடமாட்டமாக இருக்குமோ? என்ற அச்சம் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மர்ம விலங்கு எது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

25 மாவட்ட மக்களே உஷார்... வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிக கன மழை எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

* சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

* சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

* சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

கன முதல் மிக கனமழை

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கன முதல் மிக கனமழை

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

19-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

20-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

21-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

22-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

23-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, அவ்வப்போது கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று மற்றும் நாளை கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
பொது மக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) சென்னை, ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் தொடங்கி வைக்கப்பட்டது. உணவுதுறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

சன்னரக அரிசி

இத்திட்டம் சென்னையில் 30 இடங்களில் முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரிசி விலை

பொது மக்களின் தேவைக்கேற்ப ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி
தேனிசை தென்றல் தேவா இன்று திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்தார்.சினிமாவில் 'கானா' இசையை முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டு வந்தவர். அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, காதல் கோட்டை, வாலி, குஷி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

முதலமைச்சர் நேரில் அஞ்சலி

சென்னை தியாகராய  நகர் இல்லத்தில்  தேனிசை தென்றல் தேவாவின் உடலுக்கு முதல்வர் விஜய்  நேரில் அஞ்சலி செலுத்தினார். தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய். ஸ்ரீகாந் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல். தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். என்று சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டிருந்தார்

மேலும் தேவாவின் உடலுக்கு  முழு அரசுமரியாதையுடன் இறுதிசடங்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில்  தேவாவின் உடல்  நாளை ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில்  தேவாவின்  உடல் அடக்கம் செய்யப்பட  உள்ளது

ரூ.270 கோடி போதைப்பொருள் பறிமுதல்- நாகையில் கைதான 4 பேரிடம் விசாரணை: சர்வதேச போதை கும்பலுடன் தொடர்பு?
நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு உயர்ரக போதைப்பொருட்கள் (மெத்தபெட்டமைன்) கடத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (திருச்சி மண்டலம்) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுகன் (வயது 27) என்பவரது வீட்டில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சுகன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டதும், இந்த கடத்தலுக்கு மூளையாக தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், வக்கீலுமான பூபாலன் (42) செயல்பட்டதும் தெரியவந்தது.

த.வெ.க. நிர்வாகி வீட்டில்...

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 8 அதிகாரிகள் வேளாங்கண்ணி அருகே கீழப்பிடாகை சிந்தாமணி மெயின் ரோட்டை சேர்ந்த பூபாலன் வீட்டிற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுகன் வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருவதும், பூபாலனின் மனைவி பிரேமியா இலங்கையை சேர்ந்தவர் என்பதும், இதனால் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பூபாலன் நண்பர்கள் மூலம் போதை பொருட்களை பல ஆண்டுகளாக கடத்தி வந்ததும் தெரியவந்தது.

135 கிலோ...

இதனையடுத்து பூபாலன், சுகன், அவரது சகோதரர் மணிகண்டன் (29) மற்றும் சதீஷ் (30) ஆகிய 4 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 135 கிலோ எடையுள்ள மெத்த பெட்டமைனை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.270 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரையும் நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள் அவர்களிடம் விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தினர். சர்வதேச கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பன குறித்தும் துருவித் துருவித் கேள்ளி எழுப்பினர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 4 பேரையும் இன்று (சனிக்கிழமை) தஞ்சாவூரில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

பூபாலன் சிக்கியது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை அண்மையில் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பூபாலன், சுகன் ஆகியோர் தொடர்பு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, 2 பேரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், கடந்த வாரம் வேதாரண்யம் விடுதியில் தங்கி இருந்தார் எனவும், அவர் கோடியக்கரையில் ஒரு மீனவரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து படகையும், அதற்கு காரைக்காலில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான ஹை ஸ்பீடு என்ஜீனையும், வாங்கி சென்றது குறித்து அப்பகுதி மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

அதன் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தினர். கனடா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழரான அவரிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அகதிகளுக்கு உதவி

மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டு கைதான வக்கீல் பூபாலன் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக நுழைந்து கைது செய்யப்பட்டவர்களுக்காக மட்டும் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்துள்ளார். இது அவருக்கு இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அதே வேளையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த பூபாலன், அக்கட்சியில் இருந்து விலகியதும், பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்துள்ளர். இதனையடுத்து பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக த.வெ.க. நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைவரும் ஒன்று சேர வேண்டும், அதிமுக-வை வலிமைப்படுத்த வேண்டும்: சி.வி. சண்முகம்
அதிமுகவின் 55-வது தொடக்க இன்று கொண்டாடப்படுகிறது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அதேவேளையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் போன்றோர் தலைமை அலுவலகத்திற்கு வருகை தரவில்லை. எஸ்.பி. வேலுமணி கோவையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார்.

சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தார். பின்னர், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதன்பின செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:-

மாண்புமிகு அம்மாவால் கட்டி காப்பாற்றப்பட்ட இந்த மாபெரும் கழகத்தின் 55-ம் ஆண்டின் துவக்க விழா. 31 வருடங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த, இந்தியாவிலேயே ஒரே கட்சி அதிமுக. அப்படிப்பட்ட பேரியக்கம் இன்று 55-வது துவக்க விழாவை கண்டிருக்கிறது.

தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு..!

இந்த நாளில் அனைத்து தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு அதிமுக வலிமை பெற வேண்டும், புத்துயிர் பெற வேண்டும், மீண்டும் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆட்சி மலர வேண்டும் என்பதுதான்.

இந்த இயக்கம் வலிமைப் பெற ஒற்றுமையாக அனைவரையும் அரவணைத்து பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையுமே மறப்போம் மன்னிப்போம், பழையது பற்றி நினைக்காமல் இனி என்ன செய்ய வேண்டும் சிந்தித்து..,

தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம்..!

தவறுகள் இரண்டு பக்கமும் இருக்கலாம், நானும் தவறு செய்திருக்கலாம், அவர்களும் தவறு செய்திருக்கலாம், தவறுகளை பார்க்காமல் அனைத்தையும் மறந்து ஒரே எண்ணம், ஒரே சிந்தனை, நம்மை ஆளவைத்த, கோடிக்கணக்கான மக்களை வாழவைத்த இயக்கம், லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பதவிகள் கொடுத்து அழகு பார்த்த இந்த இயக்கம், இந்த இயக்கும் 100 ஆண்டுகள் நிலைத்திருந்து மக்களுக்கு சேவை செய்யும் என்று அம்மா சொன்ன அந்த வார்த்தையை செயல்படுத்த நாம் ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம், ஆசை.

சசிகலா உள்பட அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும். யாரையும் விடக்கூடாது. ஒரு சிறு துரும்பை கூட விடக் கூடாது. அப்போதுதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை முதலில் தொண்டர்களுக்கு வர வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

தொண்டர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும்

தொண்டர்கள் களத்தில் நம்பிக்கையோடு பணியாற்றினால்தான் மக்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும். அந்த எண்ணத்தையும், நம்பிக்கையும் உருவாக்க வேண்டும் என்றால் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதிமுக பிளவு பட்டு இல்ல, ஒன்றாகிவிட்டார்கள், வலுவாக இருக்கிறார்கள், மீண்டும் பழைய அதிமுக வந்திருச்சி என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும்.

அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள், கோரிக்கை.

இவ்வாறு சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை- அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மேற்கூரைகள் சீரமைப்பு: அமைச்சர் ஆனந்த் நடவடிக்கை
மாநாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் என்.ஆனந்த் விரிவான ஆய்வுகளை நடத்தினார்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான 2-வது மண்டல மாநாடு கோவையில் நடந்தது.

மாநாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் என்.ஆனந்த் விரிவான ஆய்வுகளை நடத்தினார்.

அப்போது அவர் பேசும்போது:-

மழைக்காலங்களில் பள்ளிகளின் மேற்கூரைகளை சுத்தமாக பராமரிப்பது தூசிகள் மற்றும் கழிவுகள் தேங்காமல் தடுப்பது மழைநீர் முறையாக வெளியேறுவதற்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சென்றடைவதற்கும் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்பணிகளை எனது தொகுதியான தி.நகர் தொகுதியில் இருந்து உடனே தொடங்குகிறேன்.

இவ்வாறு அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.

மேற்கூரைகள் சீரமைப்பு

இதைத்தொடர்ந்து தியாகராய நகர் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மேற் கூரைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. பருவமழை காலத்தில் பள்ளி மாணவர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் நடந்த இந்த பணிகளில் சம்பந்தப்பட்ட ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.