வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடந்தது.
வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான பயிற்சி
- வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
- ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மெலட்டூர்:
அம்மாபேட்டை அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் அம்மாபேட்டை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை தொழில் நுட்பக்குழு சார்பில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவினருக்கான முன்பருவ பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாங்குடி ஊராட்சி தலைவர் கலைச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் அப்துல் நாசர் முன்னிலை வகித்தார்.
அட்மா திட்ட வட்டார தொழில் நுட்பக்குழு மேலாளர் மாதா லெட்சுமி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசுகையில்:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வடக்கு மாங்குடி பகுதி விவசாயி களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
மேலும், நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் இலவச பைப்புகள் மற்றும் 50 சதவீத மானியத்தில் சிங் சல்பேட், கடப்பாரை, மண்வெட்டி, இரும்பு பாண்டு, கைதெளிப்பான், பவர் ஸ்பிரே, ஆயில் இன்ஜின் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் டிராக்டர் உள்பட பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் அட்மா திட்ட உதவி மேலாளர் மங்களேஸ்வரி நன்றி கூறினார்.