கொளத்தூரில் லாரி மோதி வாலிபர் பலி

பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கொளத்தூரில் லாரி மோதி வாலிபர் பலி
Published on

கோயம்பேடு, சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜா (வயது24). இவர் நேற்று நள்ளிரவு கொளத்தூர் 200 அடி சாலை செந்தில் நகர் பஸ்நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து ஸ்ரீராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com