தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

திருமங்கலம்

திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் திருச்செல்வம் (வயது30).

இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சிவரக்கோட்டை பகுதியில் ஆசிரமம் கட்டும் பணியில் டைல்ஸ் கல் ஒட்டி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து திருச்செல்வம் அண்ணன் முத்தையா கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com