search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புனித சூசையப்பர் ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம்: 29-ந்தேதி தேர்த்திருவிழா
    X

    புனித சூசையப்பர் ஆலய ஆண்டு பெருவிழா தொடக்கம்: 29-ந்தேதி தேர்த்திருவிழா

    • 21-ந் தேதி முதல் 23-ந்தேதி வரை புது நன்மை தினம் கடை பிடிக்கப்படும்.
    • 30-ந் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெரும்.

    சென்னை எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு பெரு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி விழாவுக்கு தலைமை தாங்குகிறார். கொடி ஏற்றத்தை தொடர்ந்து நவநாள் ஜெபம் திருப்பலி நடைபெறும்.

    மறுநாள் 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு புது நன்மை தினம் கடை பிடிக்கப்படும். 24-ந்தேதி குழந்தைகள் தினம், 25ந்தேதி இளையோர் தினம் நடத்தப்படும்.

    26-ந்தேதி தம்பதியர் தினம், 27-ந் தேதி முதியோர் தினம் கொண்டாடப்படும். 28-ந் தேதி நற்கருனை தினம் நடைபெ றுகிறது. 29-ந் தேதி ஆடம்பர தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது. 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்கு பெருவிழாவும், திருவிழா திருப்பலியும் மேற்கொள்ளப்படும். அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெரும். விழா நாட்களில் மாலை நேரத்தில் குணமளிக்கும் சிறப்பு திருப்பலி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    அதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜாக்கப் ஆல்பர்ட் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோ தரிகள், பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    Next Story
    ×