search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் வெளியாகும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் வெளியாகும் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட நோக்கியா ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

    நோக்கியா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டு வருவதாக எச்எம்டி குளோபல் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
    பீஜிங்:

    நோக்கியா பிராண்டு கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வரும் எச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. சீன சமூக வலைத்தளமான வெய்போவில் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது இத்தகவலை அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதன் படி ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக சில காலம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    வெய்போ தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு வழங்கப்பட்ட பதிலில், "உங்களது ஆர்வம் புரிகிறது, ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட உயர்-ரக ஸ்மார்ட்போன் இப்போது தான் வெளியாகியுள்ளது, புதிய ஸ்மார்ட்போனினை தயாரித்து பொது மக்களுக்கு அறிமுகம் செய்ய கால அவகாசம் கொடுங்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    நோக்கியா சார்பில் வழங்கப்பட்டுள்ள பதிலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக சில காலம் ஆகும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நோக்கியா P1 என்ற ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்கள் தெரியவந்திருந்துள்ளது.  

    இந்திய மதிப்பில் ரூ.54,500 வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நோக்கியா P1 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஃபுல் எச்டி அல்லது QHD டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் இதில் 6ஜிபி ரேம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. 

    இன்டெல் கேபி லேக் பிராசஸர் கொண்ட சாதனம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போது "நோக்கியா விண்டோஸ் சாதனங்கள் குறித்த தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்", என பதில் வழங்கப்பட்டுள்ளது. எச்எம்டி குளோபல் மற்றும் நோக்கியா நிறுவனங்கள் வழங்கியிருக்கும் தகவல்களில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் உள்ளிட்டவை வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது.   

    இதனிடையே 18.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட நோக்கியா டேப்லெட் சார்ந்த தகவல்கள் வெளியானது. இதில் புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் என்எஃப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    Next Story
    ×