search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி
    X

    2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 254 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசம் படுதோல்வி

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்காள தேசம் இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்தது.
    தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கடந்த 6-ந்தேதி (நேற்று முன்தினம்) ப்ளோயம்ஃபோன்டின் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. டீன் எல்கர் (113), மார்க்கிராம் (143), அம்லா (132) மற்றும் டு பிளிசிஸ் (135 அவுட் இல்லை) ஆகியோரின் சதத்தால் 4 விக்கெட் இழப்பிற்கு 573 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். வங்காள தேசம் 426 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது.



    இதனால் வங்காள தேசத்தை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யுமாறு டு பிளிசிஸ் அழைத்தார். 426 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்காள தேசம் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தது.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் வங்காள தேச பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இதனால் 172 ரன்னில் சுருண்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்சிலும்  ரபாடா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.




    இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 எனக் கைப்பற்றியது. இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த டீன் எல்கர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். 
    Next Story
    ×