search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம்
    X

    இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது.

    இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். கிரிக்கெட் வீரர்களில் கவாஸ்கர், சச்சின் மற்றும் கங்குலியின் பெயர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மைதானத்திற்கு இந்திய வீரரின் பெயர் வைக்க இருப்பது மிகவும் பெருமைக்குரியதாகும். வெளிநாடுகளில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் டாரன் சாமி ஆகிய இருவரின் பெயர்களில் மட்டுமே மைதானங்கள் உள்ளன. மூன்றாவதாக கவாஸ்கரின் பெயரில் மைதானம் தொடங்கப்பட உள்ளது.

    இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘என் பெயரை மைதானத்திற்கு வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு விளையாட்டுத்துறையில் உள்ளவர்களின் பெயரை வைப்பதே முறையாகும். இத்துறையில் விளையாட்டு வீரர்களை தவிர பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர். அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் பல மைதானங்கள் தொடங்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டி (10122 ரன்கள்) மற்றும் 108 (3092 ரன்கள்) சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    Next Story
    ×