search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் வீரர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டால் ரெட் கார்டு: 28-ல் இருந்து புது ரூல்ஸ்
    X

    கிரிக்கெட் வீரர்கள் அநாகரீகமாக நடந்துகொண்டால் ரெட் கார்டு: 28-ல் இருந்து புது ரூல்ஸ்

    கிரிக்கெட் மைதானத்தில் இனிமேல் வீரர்கள் அநாகரீகமாக நடந்து கொண்டால், நடுவர் ரெட் கார்டு காண்பித்து வெளியே அனுப்பும் விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.
    கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி மிகுதியால் வீரர்கள் அந்த விதிமுறையை மீறுவது உண்டு. வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் அது எல்லை மீறுவதும் உண்டு.

    தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.



    எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

    பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த விதிமுறையை ஐசிசி நடைமுறைப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் (செப்டம்பர் 28-ந்தேதி) முதல் இது அமலுக்கு வருகிறது. அதன்பின் வீரர்கள் மைதானத்தி்ல் கடுமையாக நடந்து கொண்டால் ரெட் கார்டு பெற்று உடனடியாக வெளியே செல்ல வேண்டியதுதான். இதனால் வீரர்கள் கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.
    Next Story
    ×