search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு
    X

    விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு

    விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார்.
    வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் விளையாடுகிறது.

    இதற்காக வங்காள தேசம் அணி வீரர்கள் கடந்த சனிக்கிழமை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன் இடம்பிடித்துள்ளார்.

    அனைத்து வீரர்களும் விமானத்தில் ஏற தயாராக இருக்கும்போது ருபெல் ஹொசைனை மட்டும் தென்ஆப்பிரிக்க குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர்.

    இதனால் ருபெல் ஹொசைன் டாக்காவில் உள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டின் விதிப்படி விசா இருந்தாலும் குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதி அளித்தால் மட்டுமே விமான ஊழியர்கள் அவரை ஏற்றிச் செல்வார்கள்.



    இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ருபெல் ஹொசைனுக்கு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பிரச்சினையால் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
    Next Story
    ×