search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட்
    X

    384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட்

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 384 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இயன் போத்தம் சாதனையை முறியடித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 168 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.



    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 5-வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இயான் போத்தம் வீழ்த்திய 383 விக்கெட்டுக்களை தாண்டினார்.

    இயன் போத்தம் சாதனையை முறியடித்ததுடன் 384 விக்கெட்டுக்களுடன் டெஸ்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சக வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 492 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    2-வது இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பிராட், அந்த மூன்று விக்கெட்டுக்களை 11 பந்தில் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்து கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×