search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
    X

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

    இந்தியாவிற்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடம்பெறவில்லை.
    கென்பெரா:

    இந்தியாவுக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் மாதம் 17-ம் தேதி இந்தியா வருகிறது. அதற்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவர் நவம்பர் மாதம் இறுதியில் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

    மேலும் நாதன் கௌல்டர் நீல் தனது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இவர் மீண்டும் அணியுடன் சேர்ந்து இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளார். அதே போல் ஜேம்ஸ் ஃபால்க்னரும் இந்த அணியில் விளையாட உள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

    ஒரு நாள் போட்டிக்கான அணி:

    1. ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. அஷ்டோன் அகர், 4. கில்டன் கார்ட்ரைட், 5. நாதன் கௌல்டர்- நீல், 6. பேட்ரிக் கம்மின்ஸ், 7. ஜேம்ஸ் ஃபால்க்னர், 8. ஆரோன் ஃபிஞ்ச், 9. ஜோஷ் ஹசில்வுட், 10. ட்ராவிஸ் கெட், 11. கிளென் மேக்ஸ்வெல், 12. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 13. மேத்யூ வடே, 14. ஆடம் ஸம்பா

    டி20 போட்டிக்கான அணி:

    1. ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. ஜேசன் பெக்ரெண்டார்ஃப், 4. டான் கிறிஸ்டியன், 5. நாதன் கௌல்டர்- நீல், 6. பேட்ரிக் கம்மின்ஸ், 7. ஆரோன் ஃபிஞ்ச், 8. டிராவிஸ் கெட், 9. மோசிஸ் ஹென்றிக்ஸ் 10. கிளென் மேக்ஸ்வெல், 11. டிம் பெயின், 12. கேன் ரிச்சர்ட்சன், 13. ஆடம் ஸம்பா
    Next Story
    ×