search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. கிறிஸ் மோரிஸ், ஆலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் இன்று நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது.

    முதல் டெஸ்ட்டில் இடம்பெறாத தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் இந்த டெஸ்ட்டில் இடம்பிடித்தார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதால் முன்னணி பந்து வீச்சாளர் ரபாடா இடம் பெறவில்லை.

    டுமினி அணியில் இருந்து நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ், ஆலிவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    தென்ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. எல்கர், 2. ஹெய்னோ குன், 3. அம்லா, 4. டு பிளிசிஸ், 5. பவுமா, 6. கிறிஸ் மோரிஸ், 7. பிளாண்டர், 8. மகாராஜ், 9. ஆலிவர், 10. மோர்னே மோர்கன், 11. டி காக்

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. பேலன்ஸ், 4. ஜோ ரூட், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. மொயீன் அலி, 8. டவ்சன், 9. பிராட், 10. வுட், 11. ஆண்டர்சன்.
    Next Story
    ×