search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிமோனா ஹாலெப் லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென் கோவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரூமேனியா)- 2-ம் நிலை வீராங்கனை பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர்.

    இதில் ஹாலெப் 6-4, 3-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இந்தப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப்போட்டியில் லாத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென் கோவுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறார்.



    சிமோனா ஹாலெப் கோப்பையை வென்றால் தரவரிசை பட்டியலில் ஜெர்மனி வீராங்கனை கெர்பரை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிப்பார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதி போட்டிகள் நடக்கிறது. இதில் ஆன்டிமுர்ரே (இங்கிலாந்து)- வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்)- டொமினிக் திம் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.
    Next Story
    ×