search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
    X

    3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

    3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 156 ரன்னில் சுருட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா.
    இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.


    3 விக்கெட் வீழ்த்திய பர்னெல்

    தொடக்கத்திலேயே இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ரபாடா வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ராய் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். பர்னெல் வீசிய 2-வது ஓவரின் 5-வது பந்தில் ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.


    51 ரன்கள் அடித்து இங்கிலாந்து ஸ்கோர் உயர காரணமாக இருந்த பேர்ஸ்டோவ்

    பர்னெல் வீசிய 4-வது ஓவரின் கடைசி பந்தில் மோர்கன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரபாடா வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தில் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பட்லர் 4 ரன்னிலும், ரஷித் ரன்ஏதும் எடுக்காமலும் வெளியே இங்கிலாந்து அணி 20 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது.


    37 ரன்கள் அடித்த ரோலண்ட்- ஜோன்ஸ்

    7-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வில்லே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. வில்லே 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த அறிமுக வீரர் ரோலண்ட்-ஜோன்ஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேர்ஸ்டோவ் 51 ரன்கள் எடுத்து வெளியேற, ரோலண்ட்-ஜோன்ஸ் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை போராட, மற்றவர்கள் அடுத்தடுத்து அவுட்டாக இங்கிலாந்து அணி 31.1 ஓவரில் 153 ரன்களில் ஆல்அவுட் ஆனது.


    55 ரன்கள் விளாசிய ஹசிம் அம்லா

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 9 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பர்னெல், மகாராஜ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவரில் 95 ரன்கள் குவித்தது. அம்லா 55 ரன்கள் எடுத்த நிலையில் ரோலண்ட்-ஜோன்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். டி காக் 34 ரன்கள் எடுத்த நிலையிலும், டு பிளிசிஸ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினார்கள்.


    34 ரன்கள் எடுத்த டி காக்

    4-வது விக்கெட்டுக்கு டுமினியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் டி வில்லியர்ஸ் அணியை 28.5 ஓவரிலேயே வெற்றிபெற வைத்தார். தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 27 ரன்னுடனும், டுமினி 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ரபாடா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மோர்கன் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், தொடரை 2-1 என வென்றது.
    Next Story
    ×