search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா
    X

    40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா

    பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 40 வயதிற்கு மேல் 2000 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.
    பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் இன்றைய கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

    தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்டில் விளையாடி உள்ளார்.

    35 வயதிற்குப் பிறகு (2009- 2017) அவர் 4509 ரன்கள் குவித்துள்ளார். கிரகாம் கூச் 4563 ரன்களும், சச்சின் தெண்டுல்கர் 4139 ரன்களும் குவித்துள்ளனர்.

    40 வயதிற்குப்பிறகு இரண்டாயிரம் ரன்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஜேக் ஹோப்ஸ் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    Next Story
    ×