என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ‘நக்குல்’ பந்து பேஸ்பாலில் இருந்து வந்தது: காம்பீர் சொல்கிறார்
    X

    ஐ.பி.எல். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ‘நக்குல்’ பந்து பேஸ்பாலில் இருந்து வந்தது: காம்பீர் சொல்கிறார்

    ஐ.பி.எல். தொடரில் முன்னணி பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ பந்து மூலம் பேட்ஸ்மேன்களை திணறடித்து விடுகிறார்கள். இந்த வகை பந்துவீச்சு பேஸ்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது என்று காம்பீர் கூறியுள்ளார்.
    ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 167 ரன்கள் சேர்த்தது. பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் கிறிஸ் லின் 52 பந்தில் 84 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மோகித் சர்மா 3 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்த தொடர் முழுவதும் பந்து வீச்சாளர்கள் ‘நக்குல்’ என்ற ஒருவகை பந்துவீச்சை வெளிப்படுத்திவருகிறார்கள். வேகமாக ஓடிவந்து பந்தை மெதுவாக வீசும் இந்த வகை பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். கொல்கத்தா பேட்ஸ்மேன்களை இந்த வகை பந்துவீச்சால்தான் மோகித் சர்மா திணறடித்தார்.

    மோகித் சர்மாவைத் தவிர ஐதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார், புனே அணியின் ஜெய்தேவ் உனத்கட் ஆகியோரும் இந்த வகை பந்துவீச்சில் அசத்தி வருகிறார்.



    இதுகுறித்து காம்பீர் கூறுகையில் ‘‘நக்குல் பந்துவீச்சு முறையானது கிரிக்கெட்டிற்கு பேஸ்பால் விளையாட்டில் இருந்து வந்ததாகும். இந்த வகை பந்துகளை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக உள்ளது. பேஸ்பால் விளையாட்டில் நிலையான ஒருவகை பந்துகளை வீசுவதற்குப் பதிலாக மாறுபாடாக ‘நக்குல்’ பந்து வீசுகிறார்கள். வேகமான ஓடிவந்து இதுபோன்று மாறுபட்ட முறையில் கிரிக்கெட் போட்டியில் பந்து வீசுவதற்கு மோகித் சர்மா தகுதியானவர்’’ என்றார்.
    Next Story
    ×