search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
    X

    ஐ.பி.எல்.: 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

    ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
    ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அம்லா (65), ஷேன் மார்ஷ் (30), மேக்ஸ்வெல் (31), அக்சார் பட்டேல் (34) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

    189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் லயன்ஸ் அணியின் மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மெக்கல்லம் 6 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் பிஞ்ச் 13 ரன்னில் வெளியேற, ரெய்னா 32 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    70 ரன்களுக்கும் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்த குஜராத் அணியால், சரிவில் இருந்து மீள முடியாமல் போனது. தினேஷ் கார்த்திக் மட்டும் கடைசி வரை அவுட்டாகாமல் 44 பந்தில் 58 ரன்கள் சேர்க்க, குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதனால் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா, கரியப்பா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    Next Story
    ×