search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெருக்கடியில் இருந்து டோனி மீண்டார்: ஸ்டீவ் சுமித் பாராட்டு
    X

    நெருக்கடியில் இருந்து டோனி மீண்டார்: ஸ்டீவ் சுமித் பாராட்டு

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய மகேந்திரசிங் டோனி நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளதாக புனே கேப்டன் சுமித் தெரிவித்தார்.
    புனே:

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் ரைசிங்புனே சூப்பர் ஜெயின்ட்- சன்ரைசர்ஸ் ஜதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 55 ரன்னும், வார்னர் 43 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடி புனேவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் இருந்தது. ஆனால் டோனி கடைசி வரை நின்று அபாரமாக விளையாடினார். கடைசி பந்தில் 2 ரன் தேவை என்று இருந்த போது பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.

    அவர் 34 பந்தில் 61 ரன் எடுத்தார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    வெற்றி குறித்து புனே கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறியதாவது:-



    ஆட்டம் கடைசி கட்டம் வரை சென்றது. டோனி களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினார். அவர் நெருக்கடியில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடினார்.

    இந்த ஆடுகளம் 160 முதல் 165 ரன் எடுக்கக்கூடியதாகும். ஆனால் பந்து வீச்சில் எங்களது திட்டத்தை செயல்படுத்தவில்லை. இருந்தாலும் நன்றாக பேட்டிங் செய்தோம். உள்ளூரில் இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் உள்ளது. புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண்போம் என நம்புகிறேன் என்றார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற டோனி கூறுகையில் இது கடினமான ஆட்டம். கடைசி கட்டத்தில் நாங்கள் அடித்து ஆடினோம். அது முக்கியமானது மனோஜ் திவாரி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    ஒரு ஓவரில் 7,8,9,10 ரன் எடுப்பது பெரிய வி‌ஷயமல்ல. உங்களுடைய அமைதியை கடைபிடிப்பதுதான் முக்கியம் என்றார்.
    Next Story
    ×